சென்னை
சென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதலாக 24 நீதிபதிகள் நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் பணியிடம் 75. ஆனால் தற்போது 38 நீதிபதிகள் மட்டுமே பணி புரிகின்றனர். இதனால் வழக்கு விசாரணைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக புதிய நீதிபதிகள் நியமிக்க கோரி தலைமை நீதிபதியிடம் வற்புறுதினர்.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்களில் புதிதாக நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைத்து கடந்த பிப்ரவரி மாதம் 19 வக்கீல்கள், 11 மாவட்ட நீதிபதிகள் என 30 பேர் பெயர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்க்கு அனுப்பி இருந்தது
சென்னை ஐகோர்ட் அனுப்பிய பட்டியலிலிருந்து 24 பேரை தேர்வு செய்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இவர்களில் 15 பேர் வக்கீல்கள் – பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, சத்ய சந்திரன், ஜிஆர்.சுவாமிநாதன், அப்துல், எம்.தண்டபானி, பி.டி ஆதிகேசவலு, வி.பார்த்திபன், ஆர்.சுப்பிரமணியம், எம்.கோவிந்தராஜ், எம்.சுந்தர், ஆர்.சுரேஷ்குமார், நிஷாபானு, எம்எஸ்.ரமேஷ், அனிதா சுமந்த், எஸ்எம்.சுப்பிரமணியம்.
9 மாவட்ட நீதிபதிகள உயர்நீதி மன்ற நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ளார்கள். அவர்கள் வவிரம்: ஆர்எம்டி.டீகாராமன், என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி, டி.ரவிந்திரன், எஸ்.பாஸ்கரன், பி.வேல்முருகன், ஜி.ஜெயசந்திரன், சி.வி.கார்த்திகேயன், பஷீர் அகமது ஆகியோர்.
இவர்கள் பதவி ஏற்பது பற்றிய விவரம் இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும்.