Thanjai Rajesh  அவர்களின் முகநூல் பதிவு:
 13697185_10206817760351716_8490057822351064060_n
‪#‎மகிழ்ச்சி‬
டைட்டில் கார்டு போட்டது முதல் வணக்கம் போடும் வரை இருக்கைகளில் ஏறி நின்று விசிலடித்து குத்தாட்டம் போட்டு கொண்டாடும் வயதை கடந்துவிட்ட ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்தும் , மீண்டும் பார்க்க நினைக்க வைக்கும் படம்…
மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் நிலையை எதிர்த்து மானுடத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லை, தகுதி இருப்பவன், உழைப்பவன் முன்னேறிச்செல்ல அத்தனை தகுதிகளையும் கொண்டவன் என்ற மனிதம் போற்றுவோரை ரசிக்க வைக்கும் படம்…

தமிழன் எங்கே போனாலும் தொடர்ந்து அடிக்கப்படுகிறானே.. நசுக்கப்படுகிறானே.. தமிழன் வளரவே கூடாதா..? தமிழனை வளரவே விடமாட்டார்களா..? என்று ஏக்கப்பெருமூச்சு விடும் என்னைப்போன்ற தமிழர்களின் குரலாக நாயகனின் குரல் ஒலிப்பதால் எம்மை போன்றவர்களை சிலாகிக்க வைக்கும் படம்..
மனைவியின் மேல் அன்பைப்பொழியும், அவளது அன்புக்கட்டளைகளுக்கு அன்பால் பணியும் ஆண்களை நெகிழ வைக்கும் படம்..
தன் கணவனின் நடை , உடை பாவனைகளை மாற்றி அவனை ஒரு நாயகனாக உருவாக்கி, அவனது மனைவி நான் என்று மார்தட்டி பெருமைப்படும் பெண்களை உருக வைக்கும் படம்…
துரோகங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கடந்த காலங்களை உணர வைக்கும் படம்…
உலகத்தரம் வாய்ந்த பிண்ணனி இசை என்ற எதிர்பார்ப்புடன் வருபவர்களுக்கு ஏமாற்றத்தை தரும் படம்.. (கணவனும் , மனைவியும் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொள்ளும் காட்சியில் இசையமைப்பாளர் கைகளை கட்டிக்கொண்டு தூங்கி விட்டார்.. இந்த சூழலில் ராஜா வாக இருந்தால் பின்னணி இசையில் 25 ஆண்டுகால கதையையே சொல்லி இருப்பார்)
மிக அருமையான நடிகர் கிஷோர் சரியாக பயன்படுத்தப்படவில்லை..
ராதிகா ஆப்தே ‘வெற்றிவிழா’ அமலா போல கெஸ்ட் ரோல் பண்ணி இருக்கிறார்..
தினேஷ் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.. படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் தினேஷ்…
தன்ஷிகா மிரட்டி இருக்கிறார்.. அருமை..
#‎மொத்தத்தில்_நல்ல_படம்‬..
(பொறாமையில் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவோர் பற்றி நோ கமெண்ட்ஸ்… அவர்களுக்கெல்லாம் …. அவர்கள் ஆதரிக்கும் கட்சிகளுக்கு அடுத்த தேர்தல் வரையிலும், அவர்கள் ஆதரிக்கும் நடிகர்களின் அடுத்த படம் வெளியாகும் வரையிலும் ரஜினி ரசிகர்கள் காத்திருப்பார்கள்.. தன் வினை தன்னை சுடும்)
( இத்துடன் கபாலி  விமர்சன எபிசோட் , பத்திரிகை டாட் காம் இதழைப் பொறுத்தவரை நிறைவடைகிறது: ஆசிரியர்.)