சென்னை:
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி, பரபரப்பாக ஓடும் “கபாலி“ படத்திற்கு டிகெட் கேட்டு மந்திரியின் பிஏ ஒருவர், தியேட்டர் அதிபருக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

தமிழக தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவின் சீனியர் பிஏ வி.பிரேம்குமார் என்பவர் கபாலி படத்தின் முதல் காட்சிக்கு 10 டிக்கெட் கேட்டு அபிராமி தியேட்டர் மேலாளருக்கு தனது லட்டர் பேடில் கடிதம் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
நல்ல காரியத்துக்கு கடிதம் கொடுத்திருந்தால் பரவாயில்லை. ஒரு சாதாரண படத்துக்கு டிக்கெட் கேட்டு கடிதம் கொடுத்திருப்பது பற்றி வலைதளத்தில் வாசகர்கள் காய்ச்சி எடுக்கிறார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால் 22ந்தேதி வெளியாகும் படத்திற்கு 15ந்தேதியே கடிதம் கொடுத்திருப்பது வேடிக்கையானது.
உண்மையிலேயே பிரேம்குமார் கபாலி படித்துக்க்கு டிக்கெட் கேட்டு கடிதம் கொடுத்தாரா? அல்லது வலைதள குறுப்புக்காரர்கள் போலியான கடிதத்தை ரெடி செய்து வலைதளங்களில் போட்டார்களா என்பது தெரியவில்லை.
ஆனால் உண்மையிலேயே கடிதம் கொடுத்திருந்தால், அவர் அந்த பதவிக்கு தகுதியற்றவராகிறார். தமிழக அரசு என்ன செய்கிறது என்று பார்ப்போம்….
Patrikai.com official YouTube Channel