சேலம்:
காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் சம்பத் - காவிரியில் வெள்ளம்
கலெக்டர் சம்பத்      – காவிரியில் வெள்ளம்

சேலம் கலெக்டர் சம்பத்: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து  வருவதால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  மேட்டூர் அணையை சுற்றியுள்ள 9 கிராமங்களான கோவிந்தபாடி, காவேரிபுரம், கருங்கல்லூர், கோட்டையூர், பண்ணவாடி, சின்ன மேட்டூர், செட்டிப்பட்டி, கோனூர் மேற்கு, கூனான்டியூர் ஆகிய கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக  சேலம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் அதிக அளவில் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது.