கரூர்:
ருரை அடுத்த அரவக்குறிச்சி பைபாஸ் ரோட்டில் 2 கண்டெய்னர் லாரிகள் நேற்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1500 கோடி பணத்துடன்  சென்ற கண்டெய்னர் லாரிகள்
      ரூ. 1500 கோடி பணத்துடன் சென்ற கண்டெய்னர் லாரிகள்

நேற்று மாலை  நிறுத்தப்பட்ட இந்த லாரியை சுற்றி 5 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். சந்தேகம் அடைந்த பொதுமக்கள்  கண்டெய்னர் லாரி  குறித்து  போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்த மாட்ட எஸ்.பி., வந்திதா பாண்டே, டி.எஸ்.பி., கீதாஞ்சலி ஆகியோர்  ஸ்பாட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் லாரியில் பணம்    உள்ளதாகவும், அதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதாகவும் கூறி   ஆவனங்களை  காட்டினர்.   லாரிகளின் பழுது சரி செய்யப்பட்டு புறப்பட்டு சென்றன.
கண்டெய்னர் லாரிகள் இரண்டும்  மைசூரிலிருந்து  ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான  ரூ.1500 கோடியை ஏற்றிக்கொண்டு   கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்திற்கு  செல்லும் வழியில்  ஒரு லாரி பழுதாகி நின்றதால், பாதுகாப்பு கருதி உடன் வந்த மற்றொரு லாரியும் அங்கேயே நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில்  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது   பறக்கும்  படையினர்   திருப்பூர் அருகே  ரூ.570 கோடி  எடுத்துச் சென்ற 3  கண்டெய்னர் லாரிகளை மடக்கிய விவகாரம் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கருர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.