சென்னை:
டெல்லியில் நடைபெற இருக்கும் மாநில கவுன்சில் கூட்டத்தில் ஜெ கலந்துகொள்ள வேண்டும் என்று தேமுதிக கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜயகாந்த்
                                       விஜயகாந்த்

விஜயகாந்த் அறிக்கை:  இந்தியாவின் அனைத்து முதலமைச்சர்களும் கலந்து கொள்ளும் மாநில கவுன்சில் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தமிழக அரசின் பங்காக முதலமைச்சர் ஜெயலலிதாவே கலந்துகொள்ள வேண்டும்.
எப்போதும் போல் ஒ.பன்னீர்செல்வத்தை அனுப்பாமல், முதலமைச்சரே நேரடியாக கலந்து கொண்டு,  மாநிலங்களுக்கிடையேயான உறவு, பொருளாதார திட்டங்கள், பள்ளி கல்வி விவகாரம், நேரடி மானிய திட்டம், தமிழ்நாட்டின் பாதுகாப்பு, தமிழ் மொழிக்கு முக்கிய அங்கீகாரம், கச்சத்தீவு மீட்பு, மீனவர்கள் பிரச்சனை, நதிநீர் பிரச்சனை போன்ற பல முக்கிய அம்சங்களை தமிழக மக்களுக்காக எடுத்துரைத்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, இந்த ஆலோசனை கூட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறி உள்ளார்.