india-train31

சென்னை:
தீபாவளி பண்டிகைககான  ரயில் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல்  துவங்கியது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் மாதம் 29-ம் தேதி வருகிறது.  இதையொட்டி  சென்னையில் தங்கி பணிபுவோர் மற்றும் வெளியூரிலிருந்து குடியேறியவரகள்  சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அந்த நேரத்தில்  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றாலும் பெரும்பாலானவர்கள் ரயில் பயணத்தையே விரும்புவர்.
இதனால், ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.  முன்பதிவு செய்வதற்கும் கடும் போட்டி நிலவுகிறது. இதையடுத்து  120 நாட்கள் (4 மாதம்) முன்னதாகவே முன்பதிவு செய்யலாம் என்று ரயில்வே துறை அறிவித்தது.
தீபாவளி அக்டோபர் 29-ம் தேதி சனிக்கிழமை வருவதால், விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளவர்கள் அதற்கு இரண்டு நாள் முன்னதாக, அதாவது அக்டோபர் .27-ம் தேதி சொந்த ஊருக்கு திபாவளிக்காக புறப்பட  திட்டமிட்டுள்ளவர்கள் இன்று (29.06.16) காலை 8 மணி முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம்.