சென்னை:
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு  மாவட்ட செயலாளர்கள் எழுதியது போல்  9 பக்க கடிதம் ஒன்று வந்தது. அதில், “ உங்களை நம்பி வந்த நாங்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.  கட்சிக்காக நாங்கள் வசூலித்து கொடுத்த பணத்தை கட்சியின் அறக்கட்டளை என்ற பெயரில் தாங்கள் தங்கள் மனைவி மச்சான் மட்டுமே அனுபவித்து வருகிறீர்கள்”  என்றெல்லாம் குற்றம்சாட்டும் அந்த கடிதம்,  விஜயகாந்த் சமீபத்தில் 1500 கோடிக்கு சொத்துக்கள் வாங்கியதாக பட்டிலிடுகிறது.
 
download (4)
இந்தக் கடிதத்தை எழுதியது யார் என்று தெரியவில்லை. ஆனால் இது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி  வருகிறது. இதனால் தே.மு.தி.க. வட்டாரம் கடும் அதிர்ச்சி அடைந்தது.

புகார் மனு
புகார் மனு

இதையடுத்து, தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி தலைமையில் மாவட்ட செயலாளர் காமராஜ், செந்தில்குமார் உள்ளிட்ட 13 மாவட்ட செயலாளர்கள்  டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
புகாரில், “மாவட்ட செயலாளர்கள் பெயரில் தவறான கருத்துக்களை பரப்பும் வகையில் கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது.  அக் கடிதத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மதேமுதிக நிர்வாகிகளுடையதாக இருக்கிறது.. இந்த கடித்தை அனுப்பியவர்கள் மீதும் விசாரிக்காமல், இதை  வெளியிட்ட பத்திரிக்கைகள் மீதும்  சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.