கிளிநொச்சி:
டுமையான போருக்கு இடையே படித்து 2 நவீன கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறார் ஈழத்தமிழர் ஜாக்சன். தற்போது அவரது இரு கண்டுபிடிப்புகளின் காப்புரிமைக்காக  அவருக்கு ரூ200 கோடி கிடைத்திருக்கிறது.
கிளிநொச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஜாக்சன்.  1997-ம் ஆண்டு வரை கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயத்தில் படித்த இவர்,  பின்னர் வவுனியா வீரபுரம் மாணிக்கவாசம் வித்தியாலத்தில் கல்வி பயின்றார்.
தந்தையை இழந்த ஜாக்சனுக்கு  ஆசிரியையாக பணியாற்றும் அவரது தாய்தான் ஆதரவாக இருந்தார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஜாக்சன்
ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஜாக்சன்

31 வயதான ஜாக்சன், இரு புதிய கருவிகளை உருவாக்கியிருக்கிறார்.  இதில் ஒன்று மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேகமான கழிப்பறை கட்டும் தொழில்நுட்பம்; மற்றொன்று மின்சாரம் இல்லாமல் நீரிறைக்கும் இயந்திரம்.
தற்போது இந்த 2 கண்டுபிடிப்புகளும் இலங்கை மதிப்பில் ரூ200 கோடி அளவுக்கு காப்புரிமைக்கு விற்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை தொழில்நுட்ப காப்புரிமை மும்பையைச் சேர்ந்த நிறுவனத்துக்கும், மின்சாரம் இல்லாமல் நீரிறைக்கும் இயந்திரத்துக்கான தொழில்நுட்ப காப்புரிமையை ஈஸ்ட் ஈகிள் புராப்பர்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கும் ஜாக்சன் விற்பனை செய்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தானது.