முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டங்கள் மற்றும் அரசின் முக்கிய ரகசிய ஆலோசனைக் கூட்டங்களில், எந்த அதிகாரப்பூர்வ பொறுப்பும் இல்லாத இரு தனியார் நபர்கள் தொடர்ந்து பங்கேற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டை திமுக முன்வைத்துள்ளது.

இதுதொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி)யிடம் அவசர புகார் மனு அளித்துள்ளார். அதில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜான் அரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் முதல்வரின் நெருங்கிய உதவியாளர்கள் என்ற அடிப்படையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டங்கள், அதிகாரிகள் ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் உயர்மட்ட அரசுக் கலந்தாய்வுகளில் தொடர்ந்து பங்கேற்று வந்ததாக கூறப்பட்டுள்ளது.

அரசின் ரகசிய தகவல்கள் பரிமாறப்படும் முக்கிய கூட்டங்களில் தனி நபர்கள் பங்கேற்றிருப்பது சட்டவிரோதமானது என்றும், இது அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் குற்றமாக இருக்கக்கூடும் என்றும் திமுக தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட இருவர் மீதும் அரசின் ரகசிய தகவல்களை பாதுகாக்கும் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம், 1923, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), பாரதிய நியாய சன்ஹிதா (BNS) உள்ளிட்ட சட்டங்களின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்து உடனடியாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என டிஜிபியிடம் திமுக வலியுறுத்தியுள்ளது. இந்த புகார் மாநில அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]