சென்னை: அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி  காரணமாக  மின்சார ரயில் சேவை 5 நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுவதாக  அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  ஜூன் 1 முதல் 5-ம் தேதி வரை 48 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இததொடர்பாக  வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அரக்கோணம் – திருத்தணிக்கு ஜூன் 1 முதல் 5-ம் தேதி வரை அதிகாலை 4.00, 5.00 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருத்தணி – அரக்கோணத்துக்கு அதேநாட்களில் இரவு 9.15, 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள், திருத்தணி – சென்னை சென்ட்ரலுக்கு அதேநாட்களில் காலை 6.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய 5 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன

சென்னை கடற்கரை – அரக்கோணத்துக்கு ஜூன் 1 முதல் 5-ம் தேதி வரை அதிகாலை 4.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், ஆவடி – அரக்கோணத்துக்கு அதேநாட்களில் காலை 6.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,

சென்னை சென்ட்ரல் – அரக்கோணத்துக்கு காலை 6.30, 9.10, 10.30, பகல் 11.00, 12.40, மதியம் 1.25, பிற்பகல் 3.45, மாலை 4.45, 5.15, 5.45, 6.05, 6.40, இரவு 7.30. 7.45. 8.20, 9.10, 10.00, 10.55 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள், திருவாலங்காடு – அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

21 மின்சார ரயில்கள், அரக்கோணம் – திருவாலங்காடு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. மொத்தம் 48 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

திருத்தணி – சென்னை சென்ட்ரலுக்கு ஜூன் 1 முதல் 5-ம் தேதி வரை காலை 6.20 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]