சென்னை: காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சென்னை மாநகர முன்னாள் காவல்ஆணையர்  லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் காவல்துறை உயர்திகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக  சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்து, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தால் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் ஐ.பி.எஸ், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை தமிழ்நாடு அரசு (25.05.2026) வெளியிட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, லஞ்ச ஒழிப்புத்துறையின் டி.ஜி.பி அந்தஸ்திலான பதவி தற்காலிகமாகக் குறைக்கப்பட்டு, கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏ.டி.ஜி.பி) அந்தஸ்தில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து மகேஸ்வர் தயாள் ஐ.பி.எஸ் மற்றும் டி.எஸ்.அன்பு ஐ.பி.எஸ் ஆகியோருக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டு இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தீவிர திமுக அனுபிதாயான அருண் ஐபிஎஸ், கடந்த  திமுக ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில்,ஊடகத்தினரையும், சமுக வலைதள  விமர்சகர்களையும், இரவோடு இரவாக பிடித்து சிறையில் அடைத்ததும், சென்னையில் கஞ்சா உள்பட போதை பொருள் தடுப்பதில் மெத்தனம் காட்டியதும், பலர் மீது தேவையின்றி குண்டாஸ் போட்டு, அதற்காக நீதிமன்றத்தால் பலமுறை விமர்சிக்கப்பட்டவருமான அருண் ஐபிஎஸ்-க்கு தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவி வழங்கியிருப்பது புதிய மொந்தையில் பழைய கள் என்ற பழமொழியை மெய்ப்பிப்பதாகவே உள்ளது.

ஏற்கனவே முன்னாள் திமுக  அமைச்சர்கள் மீதான ஏராளமான ஊழல் வழக்குகள் அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவி  வகித்து வந்த தேவாசிர்வாதம் கிடப்பில் போட்டு வந்ததும், அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி மறுத்தும் வந்த நிலையில்,  தற்போது அந்த உயரிய பதவிக்கு அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டு இருப்பது காவல்துறையின் மீதான நம்பிக்கையை தகர்ந்தெரிந்துள்ளது.

ஏற்கனவே விஜய் தலைமையிலான ஆட்சி பதவி ஏற்று 15 நாட்களுக்குள் ஏராளமான சட்டவிரோத செயல்கள் நடைபெற்றுள்ளது, தவெக அரசின்மீதான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது அருண் ஐபிஎஸ்  லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர்  பதவியில் அமர்த்தப்பட்டு இருப்பது,  விஜய் அரசும், திராவிட மாடல் அரசுதான் என்பதை நிரூபிப்பதாகவே உள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே செந்தில் பாலாஜி, அனிதா மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அமலாக்கத்துறை தமிழ்நாடு அரசின் அனுமதி கோரியுள்ள நிலையில், திமுக அனுதாபியான அருண் ஐபிஎஸ் இந்த ஊழல் வழக்குகளுக்கு அனுமதி வழங்குவாரா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. அதுமட்டுமின்றி முன்னாள் திமுக அமைச்சர்கள் 15 பேர் மீது ஊழல் வழக்குகள்  நிலுவையில் உள்ள நிலையில், அந்த வழக்குகள் மீது கடந்த திமுக ஆட்சியில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அந்த வழக்குகள் தவெக அரசில் மீண்டும் உயிர்பெறும் என நம்பிக்கொண்டிருந்த பொதுமக்களுக்கு அருண் ஐபிஎஸ் நியமனத்தால், அதுவும் கேள்விக்குறியாகி உள்ளது.

 

[youtube-feed feed=1]