சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்அதிகரித்து வரும் பாலியல் சம்பவங்கள், கொலை கொள்ளை சம்பவங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மேலும், மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக காங்கிரஸ் அரசு, தமிழ்நாட்டை வஞ்சித்து வருவது கடுமையான விமர்சனங்களை ஏ ற்படுத்தி உள்ள நிலையில், அதுகுறித்தும்  மூத்த  அமைச்சர்கள் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்டுவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை, பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவற்றை தடுப்பது குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.  இக்கூட்டத்தில்  மூத்த அமைச்சர்களான நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்றுள்ளனர். மேலும்,  தலைமைச்செயலாளர் மற்றும் , உள்துறை செயலாளர், காவல் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

[youtube-feed feed=1]