சென்னை: அமைச்சர் செங்கோட்டையன் கோவை தனியார் மருத்துவமனையில் உடல்நலம் பாதிப்பு காரணம்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் இனிமேல் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெறுவார்கள் என அமைச்சர் அருண்ராஜ் கூறிய நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது விவாதப்பொருளாக மாறி உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர் செங்கோட்டையனுக்கு முதலில் நிதித்துறை ஒதுக்கப்பட்ட நிலையில், பின்னர் அது மாற்றப்பட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் வெளியானது. இருந்தாலும் அதை மறந்து செங்கோட்டையின், , மே 22- ஆம் தேதி சென்னை எழிலகம் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையைச் சார்ந்த அரசு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, தனது சொந்த தொகுதியான ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்திற்கு அமைச்சர் செங்கோட்டையன் சென்றிருந்தார். அங்கு அவருக்கு தவெக நிர்வாகிகள், பொன்னாடை அணிவித்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து தன்னை வெற்றி பெற செய்தமைக்காக நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு சென்னை செல்லவிருந்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு நேற்றிரவு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கோயம்புத்தூர்- அவினாசி சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அமைச்சருக்கு காய்ச்சல் குறைந்துள்ளது. எனினும், உடல்சோர்வுக் காரணமாக நாளை வரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளோம். இன்று அல்லது நாளை அமைச்சர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அமைச்சர் தற்போது முழு உடல்நலத்துடன் உள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
[youtube-feed feed=1]