சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கனிமவளத்துறை பிரபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது கனிமவளத்துறை அமைச்சர் த.கே. பிரபு அதிரடி சோதனைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் கற்களை வெட்டி எடுக்கும் குவாரிகள் மூடப்படும் என அரசு எச்சரித்துள்ளது தமிழ்நாட்டில் உள்ள கனிமவள குவாரிகளில், அரசின் அனுமதி பெற்று எத்தனை கல்குவாரிகள் செயல்படுகின்றன? அனுமதி இல்லாமல் எத்தனை குவாரிகள் இயங்குகின்றன? என்பதை ஆய்வு செய்து, அதனை அறிக்கையாக சமர்ப்பிக்கவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் கனிம வளத்துறை சார்பில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்குவாரிகள் தமிழ்நாடு அரசின் அனுமதியுடன் கற்களை வெட்டி எடுத்து வருகின்றன. ஆனால் இந்த கல்குவாரிகள், அரசு அனுமதித்த அளவுக்கும் அதிகமான கற்களை வெட்டி எடுப்படுவதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் சிபா (SIPA) கமிட்டி, தமிழ்நாட்டில் உள்ள கல்குவாரிகளில் எவ்வளவு கற்கள் வெட்டி எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்த விதிமுறையை வகுத்துள்ளது. ஆனால், இதை பெரும்பாலான கல்குவாரிகள் கடைப்பிடிப்பதே இல்லை. அனுமதிக்கப்பட்ட அளவைவிட அவை அதிகமான கற்களை வெட்டி எடுக்கின்றன, இதன் மூலம் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் தங்களின் புகாரை முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக, கல்குவாரிகள் முறையாக செயல்படுவதை கண்காணிக்கும் வகையில் பாதுகாப்பு விழிப்புணர்வு (Safety Mind) எனப்படும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கண்காணிப்பு குழுவினர் முறையாக கல்குவாரிகளைக் கண்காணிப்பதே இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்த கனிம வளங்கள் துறை அமைச்சர் பிரபு உத்தரவிட்டுள்ளார். முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்குவாரிகளிலும், கனிம வளங்கள் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அரசு நிர்ணயித்துள்ள வரைமுறைக்கு உட்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றனவா? அல்லது விதிகளை மீறி கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் அனுமதி இல்லாமல் பல்வேறு இடங்களில் கல்குவாரிகள் இயங்குவதாக புகார்கள் வந்துள்ள நிலையில், இதுகுறித்தும் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். முக்கியமாக, அரசின் அனுமதி பெற்று எத்தனை கல்குவாரிகள் செயல்படுகின்றன? அனுமதி இல்லாமல் எத்தனை குவாரிகள் இயங்குகின்றன? என்பதை ஆய்வு செய்து, அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விதிகளை மீறி அதிகமாக கற்களை வெட்டி எடுத்த கல்குவாரிகளை உடனடியாக மூடவும், அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய கல்குவாரிகள் மீது அபராதம் வசூலிக்கவும் அமைச்சர் பிரபு உத்தரவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]