சென்னை: தவெக அமைச்சரவையில் இன்று புதிதாக பதவி ஏற்றுள்ள திமுக கூட்டணி கட்சிகளான விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிகளைச் சேந்த அமைச்சர்கள் வன்னி அரசு மற்றும்ட ஷாஜகானுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், ‘யாரையும் மனம் புண்படும்படி தி.மு.க-வினர் பேச வேண்டாம்’ என வேண்டுகோள் விடுத்துளளார்.

தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்ற வி.சி.க, ஐ.யூ.எம்.எல் கட்சிகள் விஜய் தலைமையிலான த.வெ.க அரசுக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் பங்கேற்றதற்கு, தி.மு.க எம்.பி ஆ.ராசா, கடுமையான வார்த்தைகளால் சாடிய நிலையில், அமைச்சர்கள் வன்னி அரசு, ஷாஜகானுக்கு ஸ்டாலின் வாழ்த்து கூறிய மு.க.ஸ்டாலின், ‘யாரையும் மனம் புண்படும்படி தி.மு.க-வினர் பேச வேண்டாம்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்துஅவர் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்
! தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள். பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள் என குறிப்பிடுடுள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சிகள் பங்கேற்ற விவகாரத்தில், தி.மு.க எம்.பி ஆ.ராசாவின் சர்ச்சை பதிவுகளால் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள வன்னி அரசு மற்றும் ஷாஜகானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “அரசியல் முடிவை எடுக்க எந்தக் கட்சிக்கும் உரிமை உண்டு; தி.மு.க-வினர் யாரும் யாரையும் புண்படுத்தும் வகையில் கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்றுவிட்டு த.வெ.க-வுக்கு ஆதரவு அளித்து, அமைச்சரவையில் இடம்பெறுவதை தி.மு.க தரப்பு கடுமையாக விமர்சனம் செய்தது. தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி எம்.பி-யுமான ஆ.ராசா கடுமையான வார்த்தைகளால் வி.சி.க மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சிகளை விமர்சனம் செய்தார்.

தி.மு.க எம்.பி ஆ.ராசா தனது சமூக வலைதளப் பக்கத்தில், “முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்; வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக்கொடுக்குமென்றால், பூ முடித்தவனை புறந்தள்ளி – புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை. பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’த்திற்கு காத்திருப்போம்; என்றாலும் களமாடுவோம், வெற்றி நமக்கே”என்று பதிவிட்டிருந்தார்.
ஆ.ராசாவின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வி.சி.க மற்றும் தலித் தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆ.ராசா, அந்த பதிவை நீக்கினார்.
ஆனால், ஆ.ராசா மற்றொரு பதிவில், “என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் “முடத்தெங்கு”; அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்!” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவிலும் ஆ.ராசா, தி.மு.க கூட்டணியில் இருந்து சென்று த.வெ.க-வுக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் பங்கேற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க, ஐ.யூ.எம்.எல் கட்சிகளை “முடத்தெங்கு” என்று சாடியுள்ளார். ஆ.ராசாவின் இந்த பதிவு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆ.ராசாவின் இந்த சர்ச்சை பதிவுகளுக்கு வி.சி.க மற்றும் தலித் செயல்பாட்டாளர்கள் கடுமையான எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில், புதியதாக அமைச்சர்களாக பதவியேற்ற அமைச்சர்கள் வன்னி அரசு, ஷாஜகானுக்கு ஸ்டாலின் வாழ்த்து கூறிய மு.க.ஸ்டாலின், ‘யாரையும் மனம் புண்படும்படி தி.மு.க-வினர் பேச வேண்டாம்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது; “மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. வன்னி அரசு அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.” என்று அறிவுறுத்தியுள்ளார்.
மு.க. ஸ்டாலின் இந்த பதிவின் மூலம், வி.சி.க – தி.மு.க இடையேயான சமூக வலைதள மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
[youtube-feed feed=1]