தேவகோட்டை:   சிவகங்கை மாவட்டம் அருகே பாலியல் புகார் கொடுக்க வந்த பெண்ணை ஸ்டேஷன்கள் மாறி மாறி அலைகழித்து மன உளைச்சலை ஏற்படுத்திய தாக இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில்  சம்பவத்தன்று இளம்பெண் ஒருவர் ஆட்டோ டிரைவர் மீதுபாலியல் புகார் அளிக்க போலீஸ் ஸ்டேஷன் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த போலீசார், அந்தபெண்ணிடம் புகாரை பெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அந்த  பெண்ணிடம்,  இந்தகாவல்நிலையில், உங்கள் எல்லைக்குள் இல்லை என  கூறி அலைக்கழித்ததாககூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தபெண் காவல்துறை மேலதிகாரிகளுக்கு புகார் அளித்ததார். இதுகுறித்து விசாரித்த அகிதாரிகள்,  இளம்பெண்ணின் புகார் மீது  வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழித்த இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், கீதாலட்சுமி உட்பட இரு பெண் சிறப்பு எஸ்.ஐ. , தனிப்பிரிவு ஏட்டு உட்பட ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்

.கடந்த மே 18ம் தேதி புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

[youtube-feed feed=1]