சென்னை: தவெக அமைச்சரவையில், திமுக கூட்டணி கட்சியான தவெக பங்குபெற்றுள்ள நிலையில், திமுக விசிக இடையே லடாய் ஏற்பட்டுள்ளது. விஜய் அமைச்சரவையில் விசிக.. விசில் சத்தத்திற்கு முட்டு.. என திருமாவளவனை திமுக எம்.பி. ஆசா விமர்சித்துள்ள நிலையில், அதற்கு விசிக பதிலடி கொடுத்துள்ளது. இது சமூக வலைதளங்களிலும் விவாதப்பொருளாகி உள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இணைந்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த இருவர் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இதனால் திமுக தலைமை கலகலத்துள்ளது.
ஏற்கனவே, ஆட்சி அதிகாரம் ஆசையில், திமுக உடனான பலட ஆண்டுகால நட்பை முறித்துக்கொண்டு தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்த நிலையில், தொடர்ந்து, மற்ற கூட்டணி கட்சிகளான விசிக, கம்யூனிஸ்டு, முஸ்லிம் கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தன. முதலில், வெளியில் இருந்து ஆதரவு அளித்த நிலையில், தற்போது தவெகவின் வேண்டுகோளை ஏற்று ஆட்சி அதிகாரத்திலும் பங்கேற்றுள்ளன. விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இது திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தோழமை கட்சிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தவெக ஆட்சிக்கு குடைச்சல் கொடுக்கலாம் என நினைத்திருந்த திமுகவுக்கு கூட்டணி கட்சிகளின் செயல் வேதனையை ஏற்படுத்தி உள்ளன.
இதன் தொடர்ச்சியாக, திமுக எம்.பி. ராஜா, விசிகவை கடுமையாக சாடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், முன் ஏற தரப்பட்ட ஏணியும், மூட சாதியை நொறுக்க வேண்டிய சிறுத்தையும், வெறும் விசில் சத்தத்திற்கு முட்டுகொடுக்கும் என்றால், பூ முடித்தவனை புறந்தள்ளி, புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை, பெரியாரின் ‘காலதேச வர்த்தமானத்’திற்கு காத்திருப்போம்; என்றாலும் களமாடுவோம்! வெற்றி நமக்கே!! பதிவிட்டிருந்தார்.
அதுபோல, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியும் விசிகவை விமர்சித்திருந்தார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தமிழகத்தில் கூட்டணி அரசில் தமக்கும் பங்கு வேண்டும் என்ற தனது அரசியல் நிலைப்பாட்டை அழுத்தமாக முன்வைத்தபோது, ஆர்.எஸ். பாரதி இந்த விமர்சனத்தை முன்வைத்தார். : விசிக-வின் இந்தக் கோரிக்கை திமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கூட்டணி விவகாரங்களில் திமுகவின் முடிவே இறுதியானது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். தற்போது விசிக தவெக அமைச்சரவையில் இணைந்துள்ளதையும் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
இநத் நிலையில், திமுக எம்.பி. ராஜாவின் பதிவுக்கு விசிக பொருளாளர் எஸ்எஸ். பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிவில், அதிகாரம் எளியவர்ககு.. .அதிலென்ன ஆத்திரம், . ஆற்றாமையால் அள்ளி வீசும் அவதூறுகள் அசைத்திடாது… அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே. அநீதி தொடர்ந்து அனைத்தும் உரைத்தால் அணைக்க முடியா... என குறிப்பிட்டுடள்ளார்
அதுபோல, “நாங்கள் இடம் பெறாத அமைச்சரவையில் எவன் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?” என வன்மத்தை கக்கி இருக்கிறது குரைப்பதற்காகவே அறிவாலய வாசலில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் O.R.S. பாரதி என விசிக அனுதாபி ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அதுபோல தவெக அமைச்சரவையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்றுள்ளதாலும், திமுக ஐயூஎம்எல் இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் பிரிவு தலைவர், தவெக கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்தால் இணைந்து கொள்வீர்களா.? என்ற கேள்விக்கு அமைச்சரவையில் இணைய தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என காதர் மொய்தீன் தெரிவித்தார்.
தவெக கூட்டணியில் இடம்பெறுவது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினிடம் இன்று காலையில் பேசினோம். அப்போது எங்களுக்கு உதவி செய்ததற்கு நன்றி வாழ்த்துக்கள் என ஸ்டாலின் என்று மட்டுமே கூறினார் என்றவர், அதனால், கூட்டணி பற்றி பேசவில்லை என்று கூறினார்.
மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு அளித்த பதிலின்போது, . இது தேர்தல் காலத்திற்கான முடிவு இல்லை. ஆட்சியில் பங்கேற்பதற்கான முடிவு என கூறினார்.
இதையடுத்து மற்றொரு செய்தியாளர், எதிர்கட்சியாக திமுக பல்வேறு போராட்டங்களில் ஈடுபடும் போது அதில் முஸ்லிம் லீக் பங்கேற்குமா.? என்ற கேள்விக்கு, அதுஎப்படி முடியும் என்று எதிர்கேள்வி எழுப்பியவர், தவெக அமைச்சரவையில் இடம்பிடித்த பிறகு அரசுக்கு ஆதரவாகத்தான் இருக்க முடியும் என்றார்.
பின்னர், உள்ளாட்சி மன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் நிலைப்பாடு தொடர்பான கேள்விகளுக்கு, அது குறித்து அந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கூட்டணி ஆட்சி
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்போது, தவெக தலைவர் விஜய் கூட்டணி ஆட்சி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என தமிழக அரசியல் கட்சிகளுக்கு வலைவிரித்தார். அதெல்லாம் தமிழ்நாட்டில் சாத்தியமில்லை என மற்ற கட்சிகள் கண்டும் காணாமல் இருந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகள் அதிகாரத்தில் பங்கு கேட்டும், அது தமிழ்நாட்டில் சாத்தியமில்லை என மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டார்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சி தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதும், பெரும்பான்மைக்கு உதவிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் பதவி வழங்க முன்வந்தார். இதனிடையே தன்னுடைய அரசியல் கட்சியின் தொடக்கத்திலேயே ஆட்சியில் பங்கு என்பதை விஜய் அறிவித்தார். ஆனால் ஆனால் தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்த முதலமைச்சர் விஜய் அதனை நிறைவேற்றியும் காட்டியுள்ளார்.
தற்போது விஜய் அமைச்சரவையில் அவரையும் சேர்த்து 33 அமைச்சர்கள் உள்ளனர். அதிகப்பட்சம் 35 பேர் இருக்கலாம் என்ற நிலையில் மீதமுள்ள தலா ஒவ்வொரு இடத்திலும் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
. இந்த நிகழ்வு மாபெரும் வரலாற்று புரட்சியாக பார்க்கப்படுகிறது. இதுவரை ஆட்சி அதிகாரத்தில் இடம்பெறாத கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்த முதலமைச்சர் விஜயை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் திருமாவளவன் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. அமைச்சரவையில் இடம்பெறுவது மூலம் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகியவை வெளியேறியுள்ளது. இதனால் விசிக தலைவர் திருமாவளவனை திமுகவினர் கடுமையாக சாடி வருகின்றனர்.
அதன்படி திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா வெளியிட்டுள்ள பதிவும், அதற்கு விசிக கொடுத்துள்ள பதிலடியும், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]