தமிழகத்தில் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு அளித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்கள் வயது வரம்பைத் தளர்த்த வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வயது தளர்வுகளுக்கு மேலாக இந்த 5 ஆண்டு சலுகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
புதிய வயது வரம்பு விவரங்கள்:
-
குரூப் 1 தேர்வு: பொதுப்பிரிவினருக்கு 32-ல் இருந்து 37 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37-ல் இருந்து 42 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
-
குரூப் 2, 2ஏ தேர்வுகள்: பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 30-ல் இருந்து 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
-
குரூப் 4 தேர்வு: பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32-ல் இருந்து 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசுப் பணிகளுக்குத் தயாராகும் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று இந்த வயது தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.