சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலகங்களில உள்ள தொழில்நுட்ப பணிகளில் 461 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்கலாம் என டின்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட துறைகளில் அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணியிடங்கள்;, தொழில்நுட்ப பணிகளில் காலி பணியிடங்கள் உள்ளன. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 461; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் அடங்கிய நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 461 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.06.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
உதவி நிலத்தியலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 19
நிலத்தியல் மற்றும் சுரங்கம் – 8
வேளாண்மை – 2
நீர்வளம் – 9
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Sc., (Geology) முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 20 (தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் நிலை 17)
உதவிப் பொறியாளர் (வேளாண் பொறியியல்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 64
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E. (Agriculture) or B. Tech. (Agricultural Engineering) or B.Sc. (Agricultural Engineering) (or) B.E. (Mechanical) (or) B.E. (Civil) (or) B.Tech. (Automobile Engineering) or B.E. (Production Engineering) or B.E. (Industrial Engineering) (or) B.E. (Civil and Structural Engineering) or B.E (Mechanical and Production Engineering) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 20
வேளாண்மை அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor degree in Agriculture படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 20
மருந்து ஆய்வாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 9
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor degree in Pharmacy or Pharmaceutical Sciences or Medicine படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 20
தோட்டக்கலை அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 17
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc., Horticulture படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 20
உதவிப் பொறியாளர் (அமைப்பியல்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 140
தமிழ்நாடு மின்னணு கழகம் – 2
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் – 1
நெடுஞ்சாலை – 38
நீர்வளம் – 33
பொதுப்பணித்துறை – 14
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை – 50
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் – 2
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Engineering (Civil) முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 20 (தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் நிலை 17)
உதவி இயக்குநர் (தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Mechanical or Electrical or Chemical Engineering or Textile Technology or Industrial Engineering or Production Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 20
கொதிகலன் இளநிலை உதவி இயக்குநர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Degree in Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 20
இளநிலை கட்டிட வடிவமைப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி: Degree in Architectureபடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 20
உதவி பொறியாளர் – மின்னியல்
காலியிடங்களின் எண்ணிக்கை: 15
பொதுப்பணி – 13
தமிழ்நாடு மின்னணு நிறுவனம் – 2
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Electrical and Electronics Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 20
உதவி பொறியாளர் (மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Master’s Degree in Environmental Engineering or Chemical Engineering or M.Tech. Environmental Science and Technology or M.Tech. Petroleum Refining and Petrochemical or M.E. Environmental Management படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 20
சுற்றுச்சூழல் அறிவியலாளர் (மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: Master’s Degree in Science படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 20
கட்டிட வடிவமைப்பு உதவியாளர்/ திட்டமிடல் உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree of Master of Town Planning (OR) Degree in Civil Engineering; (OR) Degree in Architecture படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 20
உதவிப் பொறியாளர் (தொழிற்சாலை)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor of Engineering or Bachelor of Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 20
உதவி மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E., or B.Tech. in Computer Science and Engineering / Computer Engineering / Information Technology / Electronics and Communication Engineering / Electrical and Electronics Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 20
உதவி கணக்கு அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Chartered Accountants of India/Institute of Cost Accounts of India முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 19
தொல்லியல் துறை அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate degree in Ancient History and Archaeology / Archaeology / History and Archaeology / Epigraphy and Archaeology / History, Archaeology and Manuscriptology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 18
ஆராய்ச்சி உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Post-graduate degree in Economics or Econometrics or Statistics or Business Administration or Mathematics or Social work or Sociology or Anthropology or Agricultural Economics or Public Administration படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 18
இளநிலை அறிவியல் அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: M.Sc. (Forensic Science) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 18
உதவி கண்காணிப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master’s degree in Criminology or Forensic Science; (or) B.A. degree in Psychology or in Philosophy with Psychology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 17
கணினி மேலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s Degree in Engineering (B.E) or Bachelor’s degree in Technology (B.Tech) with Computer Science and Engineering or Computer Engineering or Information Technology or Electronics and Communication Engineering or Electrical and Electronics Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 16
மொழிபெயர்ப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Law படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 16
நூலகர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் Degree in Library Science படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 15
புள்ளியியல் உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master degree in Mathematics or Statistics படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 13
துணை மேலாளர் (பால் பண்ணை)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree with IDD / NDD or Post Graduate Degree in Dairy Science or B.Tech in Food Technology/ Dairy Technology/ Food Processing படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 13
உதவிப் பொறியாளர் (இயந்திரவியல்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் – 3
தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் – 1
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E., Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 12 (தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் ரூ. 39,800 – 1,26,500)
உதவி தொல்லியல் துறை அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate diploma in Archaeology / Epigraphy / Heritage Management and Museology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 11
உதவி சுற்றுலா அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Travel and Tourism or any degree with Diploma in Tourism படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 10
உதவி புள்ளியியல் புலனாய்வு அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 13
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Statistics or Mathematics or Economics or Applied Economics or Business Economics படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 10
வட்டார சுகாதார புள்ளியியலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 62
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Statistics or Mathematics or Economics படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 10
இளநிலை புகைப்படக்காரர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 23
கல்வித் தகுதி: B.SC degree in Visual Communication படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 9
உதவி நூலகர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி: Bachelor’s Degree in Library Science or Library and Information Science படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 8
உதவி மேலாளர் சேமிப்பு கிடங்கு
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Degree in Agriculture or in Science படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 8
இளநிலை வேதியியலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc. (Chemistry) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 8
உதவிப் பொது மேலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 28,480 – 90,570
வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி, எம்.பி.சி, பி.சி, பி.சி.எம் பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு வயது வரம்பு கூடுதலாக இருக்கும்.
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம்: எழுத்துத் தேர்வு ரூ.100, இருப்பினும் எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி, எம்.பி.சி, பி.சி, பி.சி.எம் மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2026
இந்த வேலை வாய்ப்பு குறித்து மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
முழு விவரம் காண கீழே உள்ள பிடிஎஃப் பைலை டவுன்லோடு செய்யவும்…
tnpsc-cts-non-interview-tamil-final-2026-05-20-17-29-46
[youtube-feed feed=1]