சென்னை: தவெக அமைச்சரவையில் இன்று புதிதாக பதவி ஏற்ற 23 அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை ஆர்கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தவெக எம்எல்ஏவான என். மேரி வில்சன் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாடு, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நன்மைகள் போன்ற துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் ஆர்லேகர், இன்று (மே 21) காலை பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி தவெகவில் 21 பேர், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் என 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
ஏற்கனவே முதல்வராக விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் என 10 பேர் மே 10ந்தேதி பதவி ஏற்றனர். தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இதனைத் தொடர்ந்து, தவெக கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கம் மே 21ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதன்மூலம், சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவரும் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏவுமான ராஜேஷ் குமார், மேலூர் தொகுதி எம்எல்ஏ பெ. விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதனால் கூட்டணி மந்திரி சபை உருவாகி உள்ளது. இதையடுத்து புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் முழு விவரம் வருமாறு:
சி. ஜோசப் விஜய் (முதலமைச்சர்): பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்தியக் காவல் பணி (IPS), இந்திய வனப் பணி (IFS), மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்ட அமலாக்கம், சிறப்பு முயற்சிகள், வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புறக் கடன் சுமை, இளைஞர் நலன், குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல்.
என். ஆனந்த்: ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியம், பாசனம், சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டங்கள்.
ஆர். நிர்மல்குமார்: மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்பு, ஆளுநர், தேர்தல்கள் மற்றும் பாஸ்போர்ட்.
கே.ஏ. செங்கோட்டையன்: வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை, பூதான், கிராமதான் மற்றும் சட்டமன்றம்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் அவர்களின் துறைகள்:
ஸ்ரீநாத் (தூத்துக்குடி தொகுதி): மீன்வளம் மற்றும் மீன்வள மேம்பாட்டுக் கழகம்.
கமலி . எஸ் (அவினாசி தொகுதி): கால்நடை பராமரிப்புத் துறை.
சி. விஜயலட்சுமி (குமாரபாளையம் தொகுதி): பால்வளம் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை.
ஆர்.வி. ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம் தொகுதி): வனத்துறை.
வினோத் (கும்பகோணம் தொகுதி): வேளாண்மை, வேளாண் பொறியியல், வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, சர்க்கரை, கரும்புத் தீர்வை, கரும்பு மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு.
ராஜீவ் (திருவாடானை தொகுதி): சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் பருவநிலை மாற்றம்.
பி. ராஜ்குமார் (கடலூர் தொகுதி): வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகர திட்டமிடல் திட்டங்கள் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு, சிஎம்டிஏ (CMDA), தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நகர்ப்புற மேம்பாடு.
வி. காந்திராஜ் (அரக்கோணம் தொகுதி): கூட்டுறவுத் துறை.
மதன் ராஜா . பி (ஒட்டப்பிடாரம் தொகுதி): குடிசைத் தொழில்கள், சிறு தொழில்கள் உள்ளிட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME).
ஜெகதீஸ்வரி . கே (ராஜபாளையம் தொகுதி): சமூக நலன் (பெண்கள் நலன், அனாத இல்லங்கள், சீர்திருத்த நிர்வாகம், பிகார் ஹோம்ஸ், சமூக சீர்திருத்தங்கள் மற்றும் சத்துணவுத் திட்டம்).
ராஜேஷ் குமார் . எஸ் (கிள்ளியூர் தொகுதி): சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்.
எம். விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு தொகுதி): கைத்தறி மற்றும் துணிநூல், காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம்.
லோகேஷ் தமிழ்செல்வன் . டி (ராசிபுரம் தொகுதி): வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், கடன் நிவாரணம் (கந்துவட்டி சட்டம் உள்ளிட்டவை), சீட்டுகம்பனிகள் மற்றும் நிறுவனங்கள் பதிவு.
விஜய் தமிழன் பார்த்திபன் . ஏ (சேலம் தெற்கு தொகுதி): போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனச் சட்டம்.
ரமேஷ் (ஸ்ரீரங்கம் தொகுதி): இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை.
பி. விஸ்வநாதன் (மேலூர் தொகுதி): உயர்கல்வி (தொழில்நுட்பக் கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்டவை).
குமார் . ஆர் (வேளச்சேரி தொகுதி): செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள்.
தென்னரசு . கே (ஸ்ரீபெரும்புதூர் தொகுதி): வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் நலன்.
வி. சம்பத் குமார் (கோயம்புத்தூர் வடக்கு தொகுதி): பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்.
முகமது ஃபார்வாஸ் . ஜே (அறந்தாங்கி தொகுதி): தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, எடைகளும் அளவைகளும், நகர்ப்புற மற்றும் ஊரக வேலைவாய்ப்பு, கொத்தடிமை தொழிலாளர் நலன்.
டி. சரத்குமார் (தாம்பரம் தொகுதி): மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்.
என். மேரி வில்சன் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி): நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாடு, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நன்மைகள்.
விக்னேஷ் கே (கிணத்துக்கடவு தொகுதி): மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை.
[youtube-feed feed=1]