சென்னை;  தமிழ்நாட்டின்  மருத்துவத்துறைக்கு ரூ.2.90 கோடியில் 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்கள் வாங்கப்பட்டுள்ளது. இதன் சேவையை  கொடி அசைத்து   தொடங்கி வைத்த முதல்வர் விஜய், வாகனத்தை ஓட்டி ஆய்வு செய்தார்.

சென்னை தலைமைச் செயலகம், முதல்வர் அலுவலக நுழைவுவாயில் அருகில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்திற்கு ரூ. 2.90 கோடி மதிப்பீட்டில் 40 புதிய வாகனங்கள் புதியதாக வாங்கப்பட்டுள்ளன. இந்த  ஆம்புலன்ஸ் ஜீப் வாகனங்களின் சேவையை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலக நுழைவுவாயில் அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது.  தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில், 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களின் சேவையைக் கொடியசைத்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, அந்த வாகனங்களை இயக்கவுள்ள ஓட்டுநர்களுக்கு வாகனங்களின் சாவிகளை அவர் முறைப்படி வழங்கினார்.

நிகழ்வின் சிறப்பம்சமாக, புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களின் திறன், வேகம் மற்றும் இயக்கக் கட்டுப்பாடுகளைப் பரிசோதிக்கும் வகையில், ஒரு வாகனத்தை முதலமைச்சர் விஜய் தானே ஓட்டிப் (டெஸ்ட் டிரைவ்) பார்த்தார். தலைமைச் செயலக வளாகத்திற்குள் அவரே வாகனத்தை இயக்கி சோதனை செய்த விடியோவும், புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழகத்தின் கிராமப்புற மற்றும் ஊரகப் பகுதி மக்களின் மருத்துவத் தேவைகளை விரைந்து பூர்த்தி செய்யும் நோக்கில், இந்த 40 புதிய வாகனங்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது அந்தந்த வாகனங்களில் ஓட்டுநர்களுக்கு கார் சாவியை வழங்கினார். அப்போது கடைசியாக கார் சாவியைப் பெற்றுக் கொண்ட ஓட்டுநர் விஜயிடம், நீங்கள் வாருங்கள். உங்களை ஒரு ரவுண்ட் கூட்டிச்செல்ல விரும்புகிறேன் என தெரிவித்தார். அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் முதலமைச்சர் விஜய் கார் சாவியைப் பெற்றுக் கொண்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டார். அந்த காருக்கென நியமிக்கப்பட்ட ஓட்டுநரை முன்பக்க இருக்கையில் அமர வைத்து தலைமைச் செயலகத்தில் ஒரு ரவுண்ட் வந்தார். மேலும் புதிதாக வாங்கப்பட்ட காரின் தரத்தையும் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அந்த ஓட்டுநர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.

இந்த சம்பவம் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், காவல்துறையினர், வருகை தந்திருந்த பொதுமக்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முதலமைச்சராக இருப்பவர் தலைமைச் செயலகத்தில் புதிய திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைப்பார்கள். உதாரணமாக புதிய வாகனங்கள் சேவையை தொடங்கி வைக்கிறார்கள் என்றால் அந்த வாகனத்தில் அமர்ந்து அதிகப்பட்சமாக பயணிப்பார்கள். வாகனத்தை இயக்க மாட்டார்கள். ஆனால் தற்போதைய முதலமைச்சர் விஜய் வாகனத்தை ஓட்டியது பாராட்டைப் பெற்றுள்ளது.

[youtube-feed feed=1]