சென்னை: தமிழகத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது! எண்ணெய் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 4 ஆண்டுகளுக்கு பிறகு 2026, மே மாதம் 15ந்தேதி பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக லிட்டருக்கு ரூ.3 உயர்ததப்பட்டது. இது பொதுமக்களிடைய அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த நாட்களில்  (மே 19ந்தேதி) மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் அனைத்து சில்​லறை விற்​பனை நிலை​யங்​களி​லும் பெட்​ரோல் மற்​றும் டீசல் இருப்பு போது​மான அளவு உள்​ள​தாக, தமிழகம், புதுச்​சேரி எண்​ணெய் தொழில்​துறை நிறு​வனங்​களுக்​கான மாநில ஒருங்​கிணைப்​பாளர் வி.சி.அசோகன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்​து, அவர் வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பில், ஒட்டுமொத்த எரிபொருள் விநி​யோகம் சம்​பந்​தப்​பட்ட கிடங்​கு​களில் இருந்து சில்​லறை விற்​பனை நிலை​யங்​களுக்கு எந்​த​வித இடையூறும் இன்றி நடை​பெறுகிறது. எரிபொருள் விநி​யோகங்​கள் தொடர்ந்து கண்​காணிக்​கப்​படு​கின்​றன.

தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் நுகர்​வோர்​களின் எரிபொருள் தேவைக்​கேற்ப அனைத்து சில்​லறை விற்​பனை நிலை​யங்​களி​லும் எரிபொருள் இருப்பு இருக்​கிறது. எனவே, பொது​மக்​கள் பதற்றமடைய வேண்​டாம். எரிபொருளை அதிக இருப்பு வைக்க வேண்​டாம்.

தமிழகம் மற்​றும் புதுச்​சேரி மக்​களுக்கு தடை​யின்றி எரிபொருளை விநி​யோகம் செய்​வதை உறுதி செய்ய எண்​ணெய் சந்தை நிறு​வனங்​கள் உறு​திபூண்​டுள்​ளன.

இவ்​வாறு கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]