டெல்லி: “தமிழில் பொறிக்கப்பட்ட சோழர் பெருமை”யை கூறும் செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து தாயகம் திரும்புகிறது பிரதமர் மோடி பெருமிதத்துடன் தனது எக்ஸ் தளத்தில் தமிழில்  பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி சமீபத்தில் நெதர்லாந்து உள்பட 5 நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேண்கொண்டார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுடன், பல்வேறு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டத்திடடார். இந்த பயணத்தின்போது, ஏற்கனவே இதுதொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் முயற்சியால்,   நெதர்லாந்து,  லைடன் பல்கலைக்கழகத்தில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால செப்பேடுகள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில்வ,  “இது இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்; சோழர்களின் கலாச்சாரம் மற்றும் கடற்படைத் திறமையால் நாம் பெருமை கொள்கிறோம்” எனப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

நெதர்லாந்து நாட்டின் அதிகாரப்பூர்வப் பயணத்தை நிறைவு செய்துள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து சோழர் காலத்து வரலாற்றுச் சிறப்புமிக்க செப்புப் பட்டயங்கள் இந்திய அரசிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது/

குறித்துத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்ல, அதில்,  “இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்.

11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.

சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை  முறைப்படுத்தியதை  குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.

நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்திற்கு தனது இரண்டாவது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மே 16, 17 தேதிகளில்  மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது, ஹேக் நகரில் உள்ள ‘ஹவுஸ் டென் போஷ்’ அரச மாளிகையில் நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். மன்னர் தம்பதியினர் பிரதமர் மோடிக்குச் சிறப்பு மதிய விருந்தளித்து கௌரவித்தனர். இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் ஆகிய இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு மற்றும் பிரதிநிதிகள் அளவிலான விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

இரு நாடுகளுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நீடித்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தகத் தொடர்புகள் மற்றும் ஆழமான மக்கள் உறவுகளை நினைவு கூர்ந்த தலைவர்கள், இந்த பன்முக உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் உலகளாவிய இணக்கத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியா-நெதர்லாந்து உறவை ஒரு ‘உத்திசார் கூட்டாண்மை’ ஆக உயர்த்த இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர். இதன் கீழ் அரசியல், வர்த்தகம், பாதுகாப்பு, விண்வெளி, குவாண்டம் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கியத் துறைகளில் வழக்கமான மற்றும் கட்டமைக்கப்பட்ட ஒத்துழைப்பை உறுதி செய்வதற்கான கூட்டு வழிகாட்டி வரைபடம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இருதரப்பு முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில், மிகவும் லட்சியமான ‘இந்தியா-நெதர்லாந்து பசுமை ஹைட்ரஜன் மேம்பாட்டு வழிகாட்டி வரைபடம்’ முறைப்படி தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பசுமை ஆற்றல் இலக்குகளுக்கும், தூய்மையான உலகளாவிய எரிசக்தி மாற்றத்திற்கும் வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளின் ஆயுதப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, கூட்டு மேம்பாடு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் மூலம் ராணுவ உபகரணங்களைத் தயாரிப்பதற்கான பாதுகாப்பு தொழில்துறை வழிகாட்டி வரைபடத்தை உருவாக்குவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை இரு தலைவர்களும் மனதார வரவேற்றனர். உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், உலகின் இரண்டாவது மற்றும் நான்காவது பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை இந்த ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சர்வதேச சட்டங்களையும், கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தையும் நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் ஜெட்டன், இந்தியா முன்னெடுத்துள்ள ‘இந்தோ-பசிபிக் பெருங்கடல்கள் முன்முயற்சியில்’ நெதர்லாந்து இணைவதாகவும், அதன் ஒரு முக்கியத் தூணுக்கு ஜெர்மனியுடன் இணைந்து கூட்டுத் தலைமை தாங்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

உலக அளவில் அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் தங்களின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தின. கடந்த 2025 ஏப்ரலில் ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்த நெதர்லாந்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் பக்கம் எப்போதும் நிற்பதாக உறுதியளித்தது.

தொழில்நுட்பத் துறையில் மிக முக்கிய மைல்கல்லாக, செமிகண்டக்டர்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, நெதர்லாந்தின் ஐந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் ட்வென்டே பல்கலைக்கழகம் ஆகியவை இந்தியாவின் ஆறு முன்னணி ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செமிகண்டக்டர் துறையில் ஆராய்ச்சி மற்றும் திறமையாளர்களை மேம்படுத்துவதற்கான ‘அறிவுப் பாலத்தை’ உருவாக்கவுள்ளன. இதற்கு ஏஎஸ்எம்எல், டாடா, என்எக்ஸ்பி போன்ற முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் தொழில்துறைப் பங்களிப்பை வழங்குகின்றன. நீர் மேலாண்மையைப் பொறுத்தவரை, புதுடெல்லி ஐ.ஐ.டி-யில் ‘நீர் மேலாண்மைக்கான சிறந்த மையம்’ அமைக்கப்படவுள்ளது.

விவசாயத் துறையில், பெங்களூருவில் பால் பண்ணை பயிற்சிக்கான பிரத்யேக மையமும், தூய்மையான தாவர மையங்களும் அமைக்கப்படவுள்ளன. மேலும், நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் இருந்த சோழர் காலத்து வரலாற்றுச் சிறப்புமிக்க செப்புப் பட்டயங்கள் இந்திய அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டதை இரு தலைவர்களும் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

[youtube-feed feed=1]