தஞ்சாவூர்: தற்போதும் தமிழ்நாட்டை ஆள்வது திராவிட மாடல் ஆட்சிதான் தஞ்சாவூரில் தி.மு.க. எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனின் இல்லத் திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் மகள் திருமண விழா இன்று காலை தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (ஏப்ரல் 17 சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு சென்றார். பின்னார் கார் மூலம் திருச்சி வழியாக, தஞ்சாவூருக்கு சென்றார்.

இன்று காலை தஞ்சாவூரில் பூண்டி கலைவாணன் மகள் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை நிறைவேற்றியது திராவிட மாடல் ஆட்சிதான். சிறு பிள்ளைகளை, குழந்தைகளை வைத்து பிரச்சாரம் செய்து ஆட்சி அமைத்துள்ளனர். நாம் அனைத்து பணிகளையும் செய்து தோற்றோம்; அவர்கள் எந்த பணியும் செய்யாமல் வெற்றி பெற்றனர். எந்த பணியையும் செய்யாமல் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறது. *சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலமாக தான் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது என்றார்.
வாக்காளர்களை சந்திக்காமல், முகவர்களை நியமிக்காமல் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். திராவிட மாடல் அரசின் திட்டங்களால் இன்றும் ஆட்சியில் இருப்பது நாம் தான். யாரும் சோகமாக இருக்கத் தேவையில்லை. நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம். தோல்வி நேரத்தில் பீனிக்ஸ் பறவை போல திமுக எழுச்சி பெறும் என்றவர் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இருக்கும் வரை, தமிழ்நாட்டை ஆள்வது திராவிட மாடல் ஆட்சிதான் என கூறினார்.
திமுக வெற்றி தோல்விகளை சமமாக கருதி உழைத்துக் கொண்டிருக்கும் இயக்கம் ஆகும். பல வெற்றிகளையும் கண்டுள்ளது; பல தோல்விகளையும் திமுக சந்தித்துள்ளது என கூறினார்.
தஞ்சாவூரில் திருமண விழாவை முடித்துவிட்டு, இன்று பகல் 12.10 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இருந்து, சென்னைக்கு திரும்பி வருகிறார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். பூண்டி கிருஷ்ணசாமி அவர்கள், பூண்டி கலைச்செல்வன் அவர்கள் எனக் கழகத்துக்காகவே தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட கழகக் குடும்ப விழா இது! சிறிய இடைவெளிக்குப் பிறகு, வெளியூர் வருகிறேன். நேற்று, திருச்சியில் இறங்கியது முதலே கழக உடன்பிறப்புகளும் மக்களும் என்னைக் கண்டதும் வெளிப்படுத்திய உணர்வினை நான் புரிந்துகொண்டேன். உங்களை நானறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள். நமக்குள் வார்த்தைகள் தேவையில்லை. ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப் போவதில்லை. நடத்தட்டும்! ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியின்போது, சமூக வலைதளங்களில் அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான தகவல்கள், மக்கள் விரோத செயல்களை சுட்டிகாட்டி செய்திகள் வெளியிடப்பட்டால், ஆட்சியாளர்களின் கைப்பாவையாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளை கொண்டு அரசுக்கு எதிரான பதிவிடும் நபர்களை இரவோடு இரவாக தேடி பிடித்து, அடித்து உதைத்து, சிறையில் அடைத்து கொடுமை படுத்திய திமுக அரசும், அக்கட்சியின் தலைவரான ஸ்டாலினும், தற்போது, சமூக வலைத்தளங்கள், இன்ஸ்டாகிராம் மூலமாக தான் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது என குற்றம் சாட்டி உள்ளது விந்தையாக உள்ளது.
[youtube-feed feed=1]