சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதற்கான பட்டியலை ஆளுநரிடம், வழங்கினார். மேலும் ஏற்கனவே தமிழ்நாடு அமைச்சரவையில் முதற்கட்டமாக இடம்பெற்ற 9 பேருக்கும் இதுவரை இலாகாக்கள் ஒதுக்கப்படும் தகவல்களையும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, ஆளுநர் மாளிகை தமிழக அமைச்சரவை பட்டியலை இன்று அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

கடந்த 10ம் (மே 2026) தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவருடன் 9பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால், அவர்கள் யாருக்கும் இதுவரை இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. மேலும், ல் அமைச்சர்கள் முழு அளவில் இன்னும் நியமி்க்கப்பட வில்லை என்பதாலும் துறைகள் ஒதுக்கப்படவில்லை என்பதாலும் அதற்கான திட் டங்களின் கோப்புகள், முறையான இலாகாக்காளுக்கான பொறுப்பு அமைச்சகள் நியமனம் செநய்யப்பட்ததால், கையெழுத்துக் காக ஏராளமான பைல்கள் காத்துக்கிடக்கின்றன என்று தகவல்கள் வெளியானது.
. இதற்கிடையில், பதவி ஏற்பு விழா முடிந்ததும், கேரள ஆளுநர் அர்லேகர் கேரள மாநிலம் சென்றுவிட்டு, நேற்று இரவு மீண்டும் சென்னை திரும்பினார். இதையடுத்து ஆளுநரை முதலமைச்சர் விஜயின் தனிச்செயலாளர் செந்தில்குமார் ஆளுநர் மாளிகையில் சந்தித்துள்ளார். அப்போது, ஏற்கனவே பதவியேற்ற அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்குவதோடு, அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆவணங்களையும் அரசு தரப்பில் சமர்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
அமைச்சர்களின் துறைகள் விவரம்
முன்னதாக மே 10ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தலைமையில் 9 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அவர்களுக்கான இலாகா விவரம் இன்று வரை வெளியாகாத நிலையில், தற்போது பதவி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜயிடம், பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்ட அமலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர், மாற்றுத்திறனாளிகள், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகள் கைவசம் உள்ளன.
முதல் முறையாக முதலமைச்சர் விஜய் வசம் அதிகபட்சமாக 16 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வழக்கமாக மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகள் தனித்தனியே பிரித்துக் கொடுக்கப்படும் நிலையில், இவை அனைத்தையும் முதல்வரே கைவசம் வைத்துள்ளார்.
அமைச்சர் என். ஆனந்துக்கு ஊரக வளர்ச்சித்துறை, ஆதவ் அர்ஜூனாவுக்கு பொதுப்பணித் துறை (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள்), விளையாட்டு மேம்பாட்டுத் துறை, அமைச்சர் அருண் ராஜுக்கு சுகாதாரத் துறை, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை ஆகியவை ஒதுக்கப்பட்டு உள்ளன.
அமைச்சர செங்கோட்டையனுக்கு முக்கியமான நிதித் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது, உடன் ஓய்வூதியத் துறையும் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜ் மோகனுக்கு பள்ளிக் கல்வித்துறை, தொல்லியல், தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சகம் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறையும்,
அமைச்சர் பிரபுவுக்கு இயற்கை வளங்கள் (கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்) துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் வெங்கட் ரமணனுக்கு உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையும் ,
அமைச்சர் சி.டி.நிர்மல் குமாருக்கு மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சட்டத் துறை (நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், ஊழல் தடுப்பு, தேர்தல்) ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே தவெக சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சரவை பதவிகள் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர்கள் யார் அவர்களுக்கு ஒதுக்கப்பட உள்ள இலாகா விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விசிகவையும் அமைச்சரவையில் இணைக்க விஜய் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களில் 5 பேருககு அமைச்சரவையில் இடம்கொடுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், உட்கட்சி பூசல் முடிவடைந்து சுமூகமான முடிவுகள் எட்டப்பட்ட பிறகு அவர்களுக்கு அமைச்சரவையில் இடங்கம் வழங்கப்படும் என்றும் கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
