சென்னை: பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு மதுவிலக்கு மற்றும் கலால்துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த திமுக ஆட்சியில் போதை பொருள் புழக்கமாக சரளமாக  காணப்பட்டது.  பள்ளி சிறுவர்கள் முதல் முதியோர்கள் போதைக்கு அடிமை யாகி கிடத்நதும், இதன் காரணமாக பல்வேறு சட்டவிரோத செயல்களும் அரங்கேறின. இதை தடுக்கவேண்டும் என பொதுமக்கள், பெற்றோர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், விஜய் தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றதும், முதல்கட்டமாக 500  டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதுடன், பள்ளி கல்லூரிகள், ஆன்மிக ஸ்தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளையும் மூட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக,   பள்ளி, கல்லூரிகளில்  அதிகரித்துள்ள போதைப் பொருள் புழக்கம்  குறித்து  ஆய்வுகளை நடத்த மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே கல்வி நிலையங்களில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள கடைகளில், சந்தேக இடங்களை அடிக்கடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் வளாகங்களை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுகளை நடத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க தனி அலகுகள் உருவாக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்த நிலையில், கலால் துறை இந்த அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கிறது.

[youtube-feed feed=1]