திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ள காங்கிரஸ் கட்சியின், முதல்வர் விடி ‘சதீசன் பதவி ஏற்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர் விஜய் கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்தபதவி ஏற்பு விழாவில், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்பட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கும் நிலையில், தமிழ்நாடு முதல்வர் விஜயும் பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவின் அடுத்த முதலமைச்சராக வி.டி. சதீசன் வரும் திங்கள்கிழமையன்று (மே 17ந்தேதி) பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் மற்ற மாநில காங்கிரஸ் முதலமைச்சர் உடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள நிலையில், இந்த செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் விஜய் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
21 உறுப்பினர்களைக் கொண்ட கேரள அமைச்சரவையில், முதலமைச்சர் உட்பட 11 அமைச்சர்களுடன் சபாநாயகர் பதவியும் காங்கிரஸுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.யு.எம்.எல் கட்சிக்கு நான்கு இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரள காங்கிரஸ் கட்சி இரண்டு அமைச்சர் பதவிகளைக் கோரினாலும், அதற்கு ஒரு அமைச்சர் பதவியுடன் துணைச் சபாநாயகர் பதவி அல்லது தலைமைச் கொறடா பதவி கிடைக்கவே வாய்ப்புள்ளது.
[youtube-feed feed=1]