100 நாட்களில் 1 இலட்சம் கோடிக்கும் மேல் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது.

இந்த மாநாட்டிற்குமுன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் நேற்றைய “வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்” மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகள் (1,02,514 கோடி ரூபாய்) ஈர்க்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் 1,21,788 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதியளிக்கப்பட்டுள்ளன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், கடலூர், சென்னை, தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, இராணிப்பேட்டை, வேலூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் பரவலாக மேற்கொள்ளப்படவுள்ளது.

இதில் இராமநாதபுரம் மாவட்டத்தில், முதன்முதலாக தொழில் திட்டம் தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உயிரியல் அறிவியல், வாகன உற்பத்தி, மின்னணுவியல் மற்றும் குறைக்கடத்திகள், ஆழ்தொழில்நுட்பம், நுகர்வோர் மின்னணுவியல், ஜவுளி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு, கடல்சார் தொழில்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படவுள்ளன.