டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வக்கு காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு குறித்து மோடி அரசை ராகுல் காந்தி கடுமையாக சாடினார்: ‘தவறுகளுக்கு மக்கள் விலை கொடுக்க நேரிடும்’ என எச்சரித்துள்ளார். நாடு முழுவதும் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ₹3 உயர்த்தியதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் இந்தத் தாக்குதல் வந்துள்ளது. இந்த விலை மாற்றத்தைத் தொடர்ந்து, புது தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹94.77-லிருந்து ₹97.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ₹87.67-லிருந்து ₹90.67 ஆகவும் உயர்ந்தது.
அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் தொடக்கம் இன்று, கிழக்கு ஆசிய நாடுகள் மீது ஈரான் தாக்குதல், காரணமாக எரிபொருட்கள் உலக நாடுகளுக்கு அனுப்ப முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால் எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் ஏற்கனவே வணிக சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்த்தப்பட்ட நிலையில், இன்று (ஏப்ரல் 15) பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.3 உயர்ததப்பட்டு உள்ளது.
இந்த விலை உயர்வுக்கு ராகுல் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளபதிவில், – பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ‘தவறுகள்’ மக்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹3 உயர்வு “மோடி அரசின் தவறு, மக்கள் விலை கொடுப்பார்கள். ₹3 அதிர்ச்சி ஏற்கனவே வந்துவிட்டது. மீதமுள்ள வசூல் தவணை முறையில் செய்யப்படும்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]