ஹைதராபாத்: வீக்கெண்ட் வந்தாலே மால், சினிமா, கஃபேன்னு போகும் ஹைதராபாத் மக்களுக்கு, இப்போ ஒரு “வேற லெவல்” அனுபவம் ரெடி ஆகுது. “சிறையில் ஒரு நாள் இருந்தால் எப்படி இருக்கும்?”ன்னு யோசிச்சு பார்த்தவர்களுக்கு, அதை நேரிலேயே அனுபவிக்க வாய்ப்பு தர்றதுதான் இந்த புதிய திட்டம்.

தெலுங்கானா சிறைகள் துறை, ஹைதராபாத்தில உள்ள சஞ்சல்குடா மத்திய சிறையில் “Feel the Jail”என்று ஒரு புதிய திட்டத்தை கொண்டு வருகிறார்கள். இதுல ரூ.500 கட்டினா, 24 மணி நேரம் முழுக்க ரியல் கைதியைப் போலவே வாழணும்.

சினிமால பார்க்குற மாதிரி இல்ல, நிஜமாவே ஜெயில் லைஃப் தான். உள்ளே போனதும் மொபைல், பணப்பை உள்ளிட்ட எல்லாவற்றையும் ஒப்படைக்கணும். “டிஜிட்டல் டிடாக்ஸ்”ன்னு சொல்லாமலேயே நடத்திடுவாங்க!

கைதிகள் மாதிரி காடி (khadi) உடை தருவாங்க. தரையில் படுக்க சாப்பாணி, போர்வை கொடுக்கப்படும். காலை 5 மணிக்கே எழுந்து, உங்க செல்லை நீங்களே சுத்தம் செய்யணும். தோட்டப் பணி மாதிரி வேலைகளும் இருக்கும்.

சாப்பாடு கூட ஸ்பெஷல் இல்லை — ஜெயில் மெனு தான்! உப்புமா, சாதம், பருப்பு, சாம்பார்/ரசம்… அதுவும் ஸ்டீல் தட்டுல.

“சரி போதும், நான் வெளியேறணும்!”ன்னு பாதியிலேயே பயந்து வெளியே வந்துட்டீங்கன்னா? அங்கதான் ட்விஸ்ட் — ரூ.1000 அபராதம்! உள்ளே போறதுக்கு ரூ.500… வெளியே வர்றதுக்கு ரூ.1000 — ஜெயில் வாழ்க்கை லைட்டா எடுத்துக்காதீங்கன்னு சொல்லுற மெசேஜ் போல!

இந்த திட்டத்தோட முக்கிய நோக்கம் “என்டர்டெயின்மெண்ட்” இல்லை. சுதந்திரத்தோட மதிப்பு என்ன, குற்றம் செய்தா என்ன விளைவு என்பதைக் கொஞ்சம் ‘ரியல்’ஆ புரிய வைக்குறதுதான்.

இதோட சேர்த்து ஒரு ஜெயில் மியூசியமும் ரெடி ஆகுது. பழைய கால தண்டனைகள், சங்கிலிகள், பழைய ஜெயில் அறைகள், நீதிமன்ற நடைமுறைகள் எல்லாம் ஆடியோ-விசுவல் மூலம் காட்டப்படுமாம்.

முன்பே 2016ல சங்காரெட்டி ஜெயிலில் தொடங்கிய இந்த முயற்சி நல்ல வரவேற்பு பெற்றது. இப்போ அதையே அப்டேட் பண்ணி, இன்னும் ரியல் அனுபவத்தோட சஞ்சல்குடாவுக்கு மாற்றிருக்காங்க.

புக்கிங் ஆன்லைன்ல இல்லை. ஒரு நாள் முன்னாடியே ஜெயில் அதிகாரிகளுக்கு போன் பண்ணி பதிவு செய்யணும். ஆதார் அல்லது வோட்டர் ஐடி கண்டிப்பா எடுத்துச் செல்லவேண்டும்.

மொத்தத்தில் — “பிக் பாஸ் வீடு” மாதிரி கேமரா இல்ல, ஆனா “ரியல் ஜெயில் அனுபவம்” உறுதி!

ஒரு நாள் சுதந்திரத்தை விட்டு வாழ்ந்து பார்த்தால்தான் அதன் அருமை புரியும் என்பதற்கான ‘லைவ் டெமோ’ தான் இந்த திட்டம்.

[youtube-feed feed=1]