சென்னை: சித்ரா பவுர்ணமி வரும் 30ந்தேதி வர உள்ளதால்,  அன்றைய தினம் திருவண்ணாமலையில் குடியிருக்கும அண்ணாமலையை கிரிவலம் செய்வதற்கான நேரம்  விவரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

நினைத்தாலே முக்தியை தரும் புண்ணிய தலமான திருவண்ணாமலையில் பெளர்ணமியில் கிரிவலம் செல்வது பாவங்கள் போக்கி, முக்தியை அருளக் கூடியதாகும். அனைத்து பெளர்ணமிகளிலம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது சிறப்பு. பொதுவாக பெளர்ணமி நாளில் சிவ தரிசனம் செய்து, சிவ வழிபாடு , முருகன்  வழிபாடு, குல தெய்வம் வழிபாடுகள் செய்வது சிறந்தது. இந்த நாட்களில் கோவில்களுக்கு சென்ற வழிபாடு செய்து,  கிரிவலம் செல்வம், விரதம் இருப்பது, புனித நீராடுவது ஆகியவை விசேஷ பலன்களை தரக் கூடியதாகும். பவுர்ணமி நாளில் சிவ வழிபாடு செய்வது  பாவங்களை போக்கி, பெரும் புண்ணியத்தை தருவதுடன் சிவனின் அருளையும் தரக் கூடியதாகும்.

இதனால் பவுர்ணமி நாளில் அண்ணாமலையார் வீற்றிருக்கும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றன. இந்த நிலையில், சிறப்புமிக்க  சித்ரா பவுர்ணமி அன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். அதனால், பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

இந்த ஆண்டு (2026)  சித்ரா பவுர்ணமி,  வருகிற 30 ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 9.52 மணிக்கு தொடங்கி மறுநாள் மே 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.08 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டும் சித்ரா பவுர்ணமியின் போது 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலத்திற்கு வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறன்றனர்.‘

[youtube-feed feed=1]