டெல்லி: காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய முதலாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது அறைகூவல் விடுத்துள்ளார்.

பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்து ஓராண்டு ஆகியுள்ளது. இத ந்நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, பயங்க்ரவாத செயல்களுக்கு இந்தியா ஒருபோதுரும் அடிபணியாது என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு (2025) ஏப்ரல் 22 அன்று மினி சுவிட்சர்லாந்து அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதில் 25 பேர் இந்தியர்கள், ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவர்.
தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் டிஆர்எஃப் பிரிவு இந்த தாக்குதலை மேற்கொண்டது. சம்பவ இடத்துக்கு ராணுவ வீரர்கள் போல உடை அணிந்து, துப்பாக்கி உடன் வந்த மூன்று தீவிரவாதிகள், அங்கு இருந்த சுற்றுலா பயணிகள் 25 பேர், உள்ளூரை சேர்ந்த ஒருவரையும் சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மஹாதேவ் உள்ளிட்ட ராணுவ நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்தது. மேலும், பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. தற்போது அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஏற்படுத்திய வலியை அந்த பகுதி சுமந்து வருகிறது.
இந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி, பதிவிட்டுள்ளார்., அதில், கடந்தாண்டு இதே நாளில், பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். அவர்களை இந்திய தேசம் ஒருபோதும் மறக்காது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த துயரத்தில் ஒரு தேசமாக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்.
எந்த வடிவத்திலான தீவிரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது. தீவிரவாதிகளின் இழிவான சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது .
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]