சென்னை: பாஜக கூறும் டபுள் என்ஜின் சர்க்கார் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டது! தமிழ்நாட்டில் ஒன்றுமில்லாத பாஜகவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுதினம் (23ந்தேதி) நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையவுள்ளது. இதனால் கடைசி கட்ட அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார் அரவிந்த் கேஜரிவால் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலான தொகுதி மறுவரையறை மசோதாவை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக எதிர்க்கிறோம். இந்த மசோதாவால் தென் மாநிலங்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார் எனக் கருதுகிறேன். தேசிய அளவில் மு.க.ஸ்டாலினின் குரல் மிகவும் வலிமையானதாக பார்க்கப்படுகிறது. மக்களுக்கு நற்பணிகளை மேற்கொள்ளும் எவருக்கும் ஆதரவு அளிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழக மக்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்.
பாஜக கட்சி வெற்றி பெறக்கூடாது என தமிழக மக்கள் நினைக்கின்றனர். தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றால் கூட பாஜகவை சேர்ந்தவர் முதலமைச்சராக பொறுப்பேற்பார்.
பாஜக கூறும் டபுள் என்ஜின் சர்க்கார் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டது. அதனால், பாஜகவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்காதீர்கள். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எவ்விதமான ஆதரவும் இல்லை” எனத் தெரிவித்தார்.
வாரிசு அரசியலை விமர்சனம் செய்யும் பாஜகவினர் தங்களது பிள்ளைகளை என்ன செய்கிறார்கள் என பார்க்க வேண்டும் என்றவர்,
வாக்களித்த ஒரு ஆண்டிலேயே டெல்லி பாஜக அரசை மக்கள் வெறுத்து விட்டனர்.
இவ்வாறு கூறினார்.
, which has no presence in Tamil Nadu! Kejriwal.
[youtube-feed feed=1]