டெல்லி: பிரதமர் கூறுவதை நம்ப பெண்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என பிரதமர் மோடியின் உரைக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறுவதை நம்புவதற்கு பெண்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

.மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் தொகுதி மறுவரையறை மசோதாவையும் இணைத்து மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் மசோதாவை நிறைவேற்றவிடாமல் தோற்கடித்தனர். இதுதொடர்பாக மக்களிடையே தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி,, தேர்தல் நடைபெறும் மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுத்த எதிர்க்கட்சிகளை தோற்கடித்து பாடம் புகட்ட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மோடியின் கூற்றை விமர்சித்துள்ளார். பிரதமரின் பேச்சை கேட்பதற்கு ”பெண்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, அவர்களுக்கு அனைத்தும் தெரியும். இன்று, கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் நகர சபைகளில் 15 லட்சம் பெண் பிரதிநிதிகள் உள்ளனர். இது பா.ஜ.க-வின் முயற்சியால் ஏற்பட்டதல்ல, காங்கிரஸ் கட்சியால் சாத்தியமானது.
2029-ஆம் ஆண்டு முதல் மகளிருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும், அதில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கும் உள்ஒதுக்கீடு வேண்டும் என்றும் நாங்கள் அரசை வலியுறுத்துகிறோம். ஆனால், பா.ஜ.க. மகளிர் இடஒதுக்கீடாக பார்க்காமல், தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் ஆட்சியில் நீடிப்பதற்கும் பயன்படுத்த முயற்சித்தது.
இன்றும் நாங்கள் கூறுவது என்னவென்றால், ஏப்ரல் 29க்குப் பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள், திருத்தங்களை எழுத்துப்பூர்வமாகத் தெரிவியுங்கள். அவற்றை மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றுகிறோம்” எனத் தெரிவித்தார்..
முன்னதாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு, பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சாசன திருத்த மசோதா கொண்டு வந்தது. இந்த மசோதா தோல்விஅடைந்தது. இந்த மசோதா வெற்றி பெற மூன்றில் இரு பங்கு ஆதரவு தேவை. ஆனால், அது கிடைக்காததால், 54 ஓட்டுகள் வித்தியாசத்தில் மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா தோல்வி அடைந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, மகளிருக்கான முன்னேற்றம் எப்படி முடக்கப்பட்டது என்பதை ஒவ்வொரு இந்தியரும் கண்கூடாக பார்த்தனர்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறை வேற்ற வேண்டும் என பல முறை முயற்சி எடுத்தும், அதில் வெற்றி பெற முடியவில்லை. இதற்காக நாட்டின் தாய்மார்கள், சகோதரிகளிடம் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
தி.மு.க., – திரிணமுல் காங்., உள்ளிட்ட கட்சிகளால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டு உள்ளது. இதை, எதிர்க்கட்சிகள் கொண்டாடியது மிகவும் அவமானகரமானது; கண்டிக்கத்தக்கது.
மகளிர் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற கனவை எதிர்க்கட்சிகள் தகர்த்துவிட்டன. 21ம் நுாற்றாண்டில் நடக்கும் அனைத்து விவகாரங்களையும் பெண்கள் கவனித்தபடி தான் இருக்கின்றனர். இதற்கான விளைவுகளை காங்., – தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்காலத்தில் நிச்சயம் சந்திக்கும். தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பெண்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
எதிர்க்கட்சிகள் பெண்களின் கவுரவத்தை காயப்படுத்தி விட்டன. இது, ஒவ்வொரு பெண்களின் மனதிலும் நிரந்தரமாக இருக்கும். எதிர்க்கட்சி களின் சுயநல அரசியலால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வியை தழுவி இருக்கிறது. கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கு காங்., பிராயசித்தம் தேடிக் கொள்ளும் என நம்பினேன். ஆனால், வரலாற்றில் இடம்பெற வேண்டிய அந்த பொன்னான வாய்ப்பை காங்., வீணடித்து விட்டது.
மசோதாவுக்கு காங்., ஆதரவு அளிக்கும் என மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால், அக்கட்சி எதிர்த்ததை பார்த்து வேதனை அடைந்தேன். ஏற்கனவே, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காங்., தன் செல்வாக்கை இழந்துவிட்டது. சொந்த பலத்தில் நிற்க முடியாத காங்., பிராந்திய கட்சி களின் தோளில் ஏறி ஒட்டுண்ணி அரசியல் நடத்தி வருகிறது
பெண்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுக்கத் தவறியதன் மூலம், அக்கட்சி தன் வீழ்ச்சியை தானே தேடிக் கொண்டது. தொகுதி மறுவரையறை மசோதாவால் எந்தவொரு மாநிலத்திற்கும் நிச்சயம் இழப்பு ஏற்படாது. தொகுதி மறுவரையறை என்றால், அனைத்து மாநிலத்திற்கும் சமமான அளவிலேயே உயர்வு கிடைக்கும். ஆனால், இந்த மசோதாவை காரணம் காட்டி, எதிர்க்கட்சிகள் வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை நிறைவேற்ற விடாமல் தோல்வி அடைய வைத்துவிட்டன.
இந்த மசோதாவை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் தோல்வி அடைய செய்துள்ளன இதறக காரணம். சுயநல அரசியல் தான் நாட்டு நலன் மீது அக்கறை இல்லை. மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் காங்., கட்சியின் முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டது. லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும், ஒட்டுமொத்த பெண்களின் ஆசியை பெற்று விட்டோம். இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்று வதற்கான போராட்டம் தொடர்ந்து நீடிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
[youtube-feed feed=1]