டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு திடீரென டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

79 வயதான சோனியா காந்தி  தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இவர் வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. ஏற்கனவே  , கடந்த ஜனவரி மாதம் சுவாச பிரச்சினைகள் காரனமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில், நேற்று இரவு (மார்ச் 24) மீண்டும்  டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அவரது மகனும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி வத்ரா ஆகிய இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர்.

தாயாரை சந்தித்து உடல் நலம் விசாரித்த ராகுல் காந்தி சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

வானிலை மாற்றத்தால் சோனியா காந்தி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

[youtube-feed feed=1]