ஷில்லாங்: கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இமாச்சல் பிரதேசத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளின் சம்பளத்தில ஒரு பகுதி 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்துவரும் இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் அரசு, நிதிசார் அழுத்தங்களைக் கையாள்வதற்காக, முதலமைச்சர், அமைச்சரவை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்நிலை அரசு அதிகாரிகளின் ஊதியத்தை ஆறு மாதங்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

காரணம்: மத்திய அரசு ‘வருவாய் பற்றாக்குறை மானியத்தை’ (Revenue Deficit Grant – RDG) நிறுத்தியதாலும், மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்து வருவதாலும் இந்த நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதி நிலைமை சீரடைந்தவுடன், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள ஊதியத் தொகை திரும்ப வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையின்படி, முதலமைச்சரின் ஊதியத்தில் 50 சதவீதமும், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் ஊதியத்தில் 30 சதவீதமும், சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நிலை அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்கள் (தலைவர்கள்/துணைத் தலைவர்கள்) ஆகியோரின் ஊதியத்தில் 20 சதவீதம் ஒத்திவைக்கப்படும்.
மேலும், அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் உயர்நிலை காவல் துறை அதிகாரிகளுக்கும் (DGP/ADGP-க்கள்) பொருந்தும்.
விலக்கு அளிக்கப்பட்ட பணியாளர்கள்:
‘குரூப்-C’ மற்றும் ‘குரூப்-D’ பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு (கீழ்நிலை ஊழியர்கள்) இந்த நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது; அவர்கள் தங்கள் முழு ஊதியத்தையும் பெற்றுக்கொள்வார்கள்.
மோசமான நிதி மேலாண்மையால் வருவாய் நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கும் இமாச்சலில, 2026–27 ஆண்டிற்கான பட்ஜெட்டை ரூ.3,586 கோடி குறைத்து அறிவித்துள்ளது.
மாநில காங்கிரஸ் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், மொத்த ஒதுக்கீடு ரூ.54,928 கோடியாக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது கணிசமான குறைப்பாகும்.
இந்த நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணமாக மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறை உதவி (RDG) நிறுத்தப்பட்டதினால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. எனினும் மோசமான நிதி மேலாண்மையே நெருக்கடிக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து பேசிய முதல்வர், இந்த நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணமாக மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறை உதவி (RDG) நிறுத்தப்பட்டதே என குற்றம் சாட்டி உள்ளார். மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இருந்தாலும் சில துறைகளைச் சேர்ந்த ஊழியரகளுக்கு ஊதிய உயர்வும் வெளியிடப்பட்டுள்ளது
பணி நிரந்தரம் செய்யப்படாத மருத்துவ அதிகாரிகளின் மாத ஊதியம் ரூ.33,600-லிருந்து ரூ.40,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
செவிலியர்கள், ஆய்வக நுட்பவியலாளர்கள், மருந்தாளர்கள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கு நுட்பவியலாளர்களின் ஊதியம், முன்பு ரூ.17,800 முதல் ரூ.31,900 வரை மாறுபட்டு இருந்த நிலையில், தற்போது அனைவருக்கும் ஒரே சீராக ரூ.25,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினக்கூலிப் பணியாளர்களின் ஊதியத்தில் ரூ.25 உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடிப் பணியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் ‘ஆஷா’ (Asha) பணியாளர்களுக்கான மாத மதிப்பூதியம் ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது.
மதிய உணவுப் பணியாளர்கள், நீர் விநியோகப் பணியாளர்கள், ‘ஜல் ரக்ஷக்’ (Jal Rakshak) பணியாளர்கள், பல்நோக்கு மற்றும் பல்திறன் பணியாளர்கள், பஞ்சாயத்து காவலாளிகள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு, அவர்களின் மாத மதிப்பூதியத்தில் கூடுதலாக ரூ.500 வழங்கப்படும்.
சட்டமன்ற உறுப்பினர்களின் முன்னுரிமைத் திட்டங்களுக்கான நிதி வரம்பை, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.200 கோடியிலிருந்து ரூ.225 கோடியாக உயர்த்துவதாகவும் முதலமைச்சர் அறிவித்தார். வழக்கமாகத் தனது ‘Alto’ காரில் சட்டமன்றத்திற்கு வரும் நடைமுறையிலிருந்து மாறுபட்டு, இந்த பட்ஜெட்டைச் சமர்ப்பிக்க முதலமைச்சர் ஒரு மின்சார வாகனத்தில் (Electric Vehicle) வருகை தந்தார்.
மதிய உணவு இடைவேளையையும் சேர்த்து, இந்த பட்ஜெட் உரை நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
[youtube-feed feed=1]