டெல்லி: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மேலும் 20 எரிபொருள் கப்பல்கள் இந்தியா வருகிறது.  இதன்மூலம் இந்தியாவில் மேலும் சில மாதங்களுக்கான எரிவாயு தேவை நிவர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் – ஈரான் போர் உலக பொருளாதாரத்தை  ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக உலக நாடுகளிடையே எரிபொருள் கிடைப்பதில் கடுமான சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இதற்கு முக்கிய காரணம் ஈரான் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய ஹார்முஸ் ஜலசந்தி தான். பெரும்பாலான உலக நாடுகளுக்கு தேவையான கச்சா எண்ணெய் ,எல்பிஜி , உரம் உள்ளிட்டவை வளைகுடா நாடுகளில் இருந்து தான் வாங்கப்படுகிறது. அப்படி வளைகுடா நாடுகளில் கொள்முதல் செய்யப்படக்கூடிய கச்சா எண்ணெய், எல்பிஜி, ஆகியவற்றை கப்பல் வழியாக வெளியே கொண்டு வர வேண்டுமென்றால் அதற்கு இருக்கக்கூடிய ஒரே வழி ஹார்முஸ் ஜலசந்தி தான்.

இந்த ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனால் தான் ஈரான் போர் அந்த ஒரு நாட்டை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலக நாடுகளையே பாதிப்படைய செய்திருக்கிறது. ஏனென்றால் ஈரான் போர் தொடங்கியதிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் இலங்கை , பாகிஸ்தான் என பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல், டீசல் மற்றும் ஏராளமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இந்த வழியாக இந்தியாவுக்கான சரக்கு கப்பல் செல்ல ஈரான் அனுமதி வழங்கி வருகிறது.   ஏற்கனவே இந்தியாவுக்கு ஈரானின் அனுமதியால் 2 கப்பல்கள் வந்தன. அதில் இருந்து சுமார் 97 ஆயிரம் டன் எரிபொருள் இறக்கப்பட்டது.இ ந்தநிலையில் மேலும் 22 கப்பல்கள் இந்தியா வருவதற்காக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வரும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதில் 20 கப்பல்களில் எரிபொருள் இருக்கிறது. சுமார் 2.15 லட் சம் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி.), 3.21 லட்சம் டன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்.பி.ஜி.) மற்றும் 16.76 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஆகியவற்றை அவை ஏற்றி வருகின்றன.

மார்ச் 18-20, 2026 நிலவரப்படி, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக 20-க்கும் மேற்பட்ட டேங்கர்கள் (சுமார் 10 எல்பிஜி டேங்கர்கள் மற்றும் ஐந்து கச்சா எண்ணெய் டேங்கர்கள் உட்பட) பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்வதற்காக இந்தியா ஈரானுடன் தீவிரமான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.

டேங்கர்களின் நிலை: இந்தியாவுடன் தொடர்புடைய சுமார் 22 டேங்கர்கள் (எல்பிஜி மற்றும் எல்என்ஜி டேங்கர்கள் உட்பட) ஹோர்முஸ் ஜலசந்தியின் மேற்கே சிக்கியுள்ளதாகவும் அல்லது பாதுகாப்பான பயணத்திற்காகக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கொடியுடன் கூடிய இரண்டு எல்பிஜி டேங்கர்கள் (ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி) ஈரானின் அனுமதியுடன் மார்ச் மாத நடுப்பகுதியில் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்தன. இது உள்நாட்டு சமையல் எரிவாயு பற்றாக்குறைக்கு ஓரளவு நிவாரணம் அளித்தது.

நிலவும் கடுமையான பதட்டங்களுக்கு மத்தியில், மீதமுள்ள டேங்கர்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் பிற அதிகாரிகளும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தியா ரஷ்யாவிடமிருந்து தனது எண்ணெய் கொள்முதலை அதிகரித்துள்ளது, மேலும் முதலில் சீனாவுக்குச் சென்ற சில எண்ணெய்க் கப்பல்கள் இந்தியாவுக்குத் திரும்பி வருகின்றன. ஹோர்முஸ் ஜலசந்தி இந்தியாவிற்கு ஒரு முக்கிய எரிசக்தி வழித்தடமாகும், மேலும் பாதுகாப்பான போக்குவரத்து இந்திய கடற்படையால் (ஆபரேஷன் சங்கல்ப்) உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.

இந்த 20 கப்பல்களில், 10 கப்பல்கள் இந்தியக்கொடியை கொண்டதாக உள்ளன. மற்ற கப்பல்களில் மார்ஷல் தீவுகள், லைபீரியா, கிரீஸ், மால்டா மற்றும் போர்ச்சுகல் ஆகிய கொடிகள் உள்ளதாக தெரிகிறது. இந்த 20 கப்பல்களுடன் இந்தியக்கொடி கொண்ட 2 கொள்கலன் கப்பல்களும் ஹார் முஸ் ஜலசந்தி வழியாக வெளியேறுகிறது.

[youtube-feed feed=1]