டெல்லி: சீனாவுக்கான இந்திய தூதராக இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவக் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஆவார்.

விக்ரம் கே. துரைசாமி, மக்கள் சீனக் குடியரசிற்கான இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.  , இவர் தற்போது ஐக்கிய இராச்சியத்திற்கான இந்தியாவின் உயர் ஆணையராகப் பணியாற்றி வருகிறார்  (IFS:1992),  இவரை மத்தியஅரசு மக்கள் சீனக் குடியரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமனம் செய்துள்ளது.  அவர் விரைவில் இப்பதவியை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு லடாக்கில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த ராணுவ மோதலை தொடர்ந்து, இந்தியா- – சீனா இடையிலான உறவுகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகின. அந்த உறவுகளை மீண்டும் கட்டமைப்பதற்கான முயற்சிகளில் இரு தரப்பும் ஈடுபட்டுள்ள சூழலில், இந்தியாவின் புதிய சீன தூதராக அனுபவம் வாய்ந்த வெளியுறவு பணி அதிகாரியான விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

1992-ம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணிப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான இவர், தற்போது ஐக்கிய ராஜ்யத்துக்கான இந்திய உயர் ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் விரைவில் தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும், வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்றவருமான துரைசாமி, இந்திய வெளியுறவு பணியில் சேருவதற்கு முன்பு ஓராண்டு காலம் பத்திரிகையாளராக பணியாற்றினார்.

இவர் பிரதமரின் தனி செயலாளராக பணியாற்றி உள்ளார். நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய தூதரகம், ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் என பல்வேறு நாடுகளில் தூதராகவும், துணை தூதராகவும் பணியாற்றி உள்ளார்.

[youtube-feed feed=1]