எரிபொருள் விலையேற்றத்திற்கும் ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளின் கட்டண உயர்வுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி பயனர்களிடையே எழுந்துள்ளது.

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான Zomato, ஒவ்வொரு ஆர்டருக்கும் வசூலிக்கும் பயன்பாட்டு கட்டணத்தை ரூ.2.40 உயர்த்தியுள்ளது.

இதன் மூலம், ஒரு ஆர்டருக்கான platform fee தற்போது ரூ.14.90 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக இது ரூ.12.50 ஆக இருந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், குறுகிய இடைவெளிக்குள் மீண்டும் உயர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், போட்டி நிறுவனமான Swiggy ஒரு ஆர்டருக்கு ரூ.14.99 வரை பயன்பாட்டு கட்டணமாக வசூலித்து வருகிறது.

மத்திய கிழக்கு பகுதியில் நீடிக்கும் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, அதனால் எரிபொருள் செலவுகள் அதிகரித்துள்ளன. டெலிவரி சேவைகள் பெருமளவில் எரிபொருளை சார்ந்துள்ளதால், இந்த செலவுச் சுமை மறைமுகமாக நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகளை உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், டெலிவரி கட்டணம் என்று தனியாக இருக்க பயனர்களிடம் வசூலிக்கப்படும் ‘பயன்பாட்டு கட்டணம்’ நேரடியாக டெலிவரி பணியாளர்களுக்கோ அல்லது எரிபொருள் செலவுகளுக்கோ செல்லவில்லை என்றும் இந்த கட்டணம் செயலியின் பராமரிப்பு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நிறுவன வருவாய் உயர்வு போன்ற காரணங்களுக்காக வசூலிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

இதனால், எரிபொருள் விலையேற்றம் ஒரு காரணமாக இருந்தாலும், அதனை முன்னிறுத்தி செயலிகள் கட்டணங்களை உயர்த்துவது நியாயமா என்ற விவாதமும் எழுந்துள்ளது.

இதற்கிடையில், Rapido நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘Ownly’ செயலியில், டெலிவரி கட்டணத்தைத் தவிர வேறு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]