சென்னை: திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2வது நாளாக நேர்காணல் நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற திமுக தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. இந்த முறை 4 முனை போட்டி நிலவி வந்தாலும் திமுக தலைமை 23 கட்சிகளைக்கொண்ட மெகா கூட்டணி அமைத்து, களத்தில் நிற்கிறது. இதனால் திமுகவின் வெற்றிவாய்ப்பு ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட நிலையே தென்படுகிறது.
இதற்கிடையில், திமுக தரப்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது. தற்போது அவர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான மூத்த நிர்வாகிகள் குழு நேர்காணல் நடத்தி வருகிறது. நேற்று (மார்ச் 17) புதுச்சேரி உள்பட சில தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது.
இதையடுத்து இன்று 2வது நாளாகவும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இன்று தென்மாவட்டங்களில் 9 மாவட்டங்களை சேர்ந்த 22 தொகுதிகளில் விருப்ப மனு அளித்த 750 பேரிடம் இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது.
