சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடும் என்று கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது.  இந்த நிலையில், வேட்பு மனுத் தாக்கல்  மார்ச் 30ந்தேதி தொடங்குகிறது. இதையடுத்து வேட்பாளர்களை களமிறக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது, வேட்பாளர் தேர்வு என அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்த நிலையில்,  சென்னை பெரம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, த.வெ.க. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. பல ஆஃபர்களை த.வெ.க. தலைவர் விஜய்க்கு கொடுத்தார்கள். ஆனால், அனைத்து ஆஃபர்களையும் விஜய் நிராகரித்துவிட்டார்.  சில கட்சிகள் கூட்டணிக்காக 90 தொகுதிகள் வழங்க முன்வந்ததாகவும், இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தருவதாக கூறியதாகவும், ஆனால் அதனை தவெக நிராகரித்ததாகவும் தெரிவித்தார். அரசியல் சலுகைகளுக்கு பதிலாக மக்கள் ஆதரவை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்க தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாகவும் ஆதவ் கூறினார்.

முக்கிய கட்சிகள் கூட்டணிகளுடன் களமிறங்கும் சூழலில், தவெக தனித்துப் போட்டியிடும் முடிவு வாக்கு சிதறலுக்கும் புதிய அரசியல் சமநிலைக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]