சென்னை: திமுக ஆட்சியில் குற்றங்கள் உயர்ந்துள்ளது என்றும், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் கூறிய தரவு தவறு என்று புள்ளி விவரங்களுடன் கூறியுள்ள பாமக தலைவர் அன்புமணி, இதுகுறித்து விவாதிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அதிகாரிகள் தரவு தவறு; திமுக ஆட்சியில் குற்றங்கள் உயர்ந்துள்ளது என புள்ளி விவரங்களுடன் பாமக தலைவர் அன்புமணி அதுகுறித்து விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும் சவால் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொலைகள் உள்ளிட்ட குற்றங்கள் குறைந்துள்ளதாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தவறானவை என்றும், அதுகுறித்து விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
2021 – தமிழ்நாடு கொலை புள்ளிவிவரம் (NCRB)
மொத்தம் கொலை: 1,741
ஆண்கள்: 1,288
பெண்கள்: 452
திருநங்கையர்: 1
18 வயதுக்கு மேல்: 1,672
குழந்தைகள்: 69
அதிகாரிகள் கூறிய எண்ணிக்கை: 1,597
வித்தியாசம்: 144 கொலைகள்
குறைந்து காட்டப்பட்டது: 8.27%
கொலைகள் – ஆட்சிக் கால ஒப்பீட்டு புள்ளிவிவரம்
2021 – திமுக ஆட்சியின் முதல் ஆண்டு
கொலைகள்: 1,741
2016 (அதிமுக முதல் ஆண்டு): 1,683
அதிகரிப்பு: 58 (3.44%)
2022 – திமுக ஆட்சியின் இரண்டாம் ஆண்டு
கொலைகள்: 1,756
2017 (அதிமுக இரண்டாம் ஆண்டு): 1,613
அதிகரிப்பு: 143 (8.86%)
2023 – திமுக ஆட்சியின் மூன்றாம் ஆண்டு
கொலைகள்: 1,742
2018 (அதிமுக மூன்றாம் ஆண்டு): 1,631
அதிகரிப்பு: 111 (6.80%)
குழந்தைகளுக்கு எதிரான இந்திய தண்டனைச் சட்ட (IPC) குற்றங்கள்
2020 – 4,338
2021 – 6,064
2022 – 6,580
2023 – 6,968
2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, திமுக ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2,630 (60.62%) அதிகரித்துள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
போக்சோ (POCSO) சட்ட வழக்குகள்
2020 – 3,057
2021 – 4,415
2022 – 4,906
2023 – 4,581
2024 – 6,975
2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 3,818 வழக்குகள் (124.89%) அதிகரித்துள்ளது.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]