மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் ஈரான் போர் காரணமாக எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ள நிலையில், ரயில்களில் வழங்கப்படும் உணவு சேவைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து IRCTC அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மார்ச் 10 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்கள், ஃபுட் பிளாசாக்கள், ஜன்ஆஹார் உணவகங்கள் ஆகியவை எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டால் மாற்று சமையல் முறைகளை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

ஈரான் போர் காரணமாக எல்பிஜி வணிக விநியோகத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சம் இருப்பதால் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் பெரும்பாலும் IRCTC-ன் அடிப்படை சமையலறைகளில் (Base Kitchens) தயாரித்து பின்னர் ரயில்களில் ஏற்றப்படுகின்றன. இந்த சமையலறைகள் பெரும்பாலும் வணிக LPG சிலிண்டர்களை பயன்படுத்துகின்றன.
எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டால், சில நேரங்களில் ரயில்களில் சமைத்த உணவு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அப்படி சேவை நிறுத்தப்பட்டால், ரயில் டிக்கெட் முன்பதிவின் போது உணவை முன்பதிவு செய்த பயணிகளுக்கு அதன் கட்டணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பயணிகளுக்கு அதிக சிரமம் ஏற்படாமல் உணவு சேவையை தொடர்வதற்காக எடுக்கப்பட்டுள்ளதாக IRCTC விளக்கம் அளித்துள்ளது.
இருந்தபோதும் பயண வழியில் தவித்த வாய்க்கு உணவு கிடைக்காமல் தவிக்கும் பயணிகள் ஐஆர்சிடிசி-யின் இந்த திடீர் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் IRCTC தினமும் சுமார் 17 லட்சம் உணவுகளை ரயில் பயணிகளுக்கு வழங்கி வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
[youtube-feed feed=1]