டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்த கெஜ்ரிவால் உள்பட 21 பேரரை சிபிஐ விடுவித்ததை  எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில், கெஜ்ரிவால் உள்பட சம்பந்தபட்டவர்கள் பதில் அளிக்க டெலலி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து கேஜரிவால், சிசோடியா உள்பட 21 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில்  சிபிஐ தாக்கல் செய்த  மீது இன்று விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, இந்த மனுமீது  டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் 21 பேரின் நிலைப்பாடு என்பது குறித்து பதில் அளிக்க  டெல்லி உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், அப்போதைய டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், துணைமுதல்வர் சிசோடியா உள்பட பலர் கைது செய்யப்பட்டதுடன், 21 பேர் மீதுகுற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என கூறி  டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வராகப் பதவி வகித்த மணீஷ் சிசோடியா  உளபட 21 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் உடனடியாக டெல்லி உயர்நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தது.  சிபிஐயின் மனுவை மார்ச் 16-ஆம் தேதி விசாரணைக்கு நீதிபதி ஸவரணா காந்தா சர்மா பட்டியலிட்டுள்ளார். இதையடுத்து, அமலாக்கத்துறை விசாரித்த பணமோசடி வழக்கின் விசாரணைகளை ஒத்திவைக்க விசாரணை நீதிமன்றத்தைக் கேட்டு உத்தரவு பிறப்பிப்பதாக டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில்  மத்தியஅரசின்  சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லி கலால் கொள்கை வழக்கில் கேஜரிவால், சிசோடியா ஆகியோரை விடுவித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு விபரீதமானது என்றும், குற்றவியல் சட்டத்தையே தலைகீழாக மாற்றிவிட்டது என்றும் அவர் வாதிட்டார்.

கலால் கொள்கை வழக்கு மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகும் என்றும், ஊழல் தொடர்பான தெளிவான வழக்கு என்று கூறியவர், விசாரணை நீதிமன்றம், சரியான விசாரணையின்றி கேஜரிவால், சிசோடியா மற்றும் பிறருக்கு ஆதரவாக விடுதலை உத்தரவைப் பிறப்பித்ததாகக் கூறிய மேத்தா, மோசடி செய்யப்பட்ட மதுபானக்கொள்கைக்கு சதி மற்றும் லஞ்சம் கொடுத்ததைக் காட்ட நிறுவனம் நுணுக்கமான ஆதாரங்களைச் சேகரித்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் கேஜரிவால், சிசோடியா மற்றும் பிற குற்றவாளிகளுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன, மேலும் சிபிஐயின் வழக்கை ஒப்புதல் அளிப்பவர்கள் மற்றும் சாட்சிகள் ஆதரித்ததாக தெரிவித்தவர்,  விசாரணை நீதிமன்ற நீதிபதி,  சிபிஐ மீது பாரபட்சமான கருத்துகளை தெரிவித்துள்ளார். இதை ஏற்ற நீதிபதி,   சிபிஐ அதிகாரிகள் மீது விசாரணை நீதிமன்றம் தெரிவித்த பாரபட்சமான கருத்துகளின் செயல்பாட்டை நிறுத்தி வைப்பதாக கூறியதுடன், மனு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிக்க உத்தரவிட்டது.

[youtube-feed feed=1]