டெல்லி: மேற்கு ஆசிய  நாடுகளில் நடைபெற்று வரும் போர் விவகாரத்தில்,  இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது  குறித்து மாநிலங்களவையில் மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு இன்று தொடங்கிய  நிலையில்,  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,  இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்தார், பிரதமர் மோடி நிலைமையை நேரடியாக கண்காணித்து வருகிறார், பிராந்தியத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், அதே நேரத்தில் எஸ். ஜெய்சங்கர் ஈரான் மற்றும் ஓமனுடன் பதற்றத்தைத் தணிக்க முயற்சிக்கிறார்.

2026ம் ஆண்டின் முதல்  மறறும்,  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த ஜனவரி  28-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கியது.  இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல்கட்ட அமர்வு ஜனவரி 28ந்தேதி தொடங்கியது.  தொடர்ந்து பிப்ரவரி 1ந்தேதி ஞாயிற்றுக்கிழமை, முதன்முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தது. தொடர்ந்து அதன்மீதான விவாதங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதங்கள், அமளிகள் நடைபெற்றதுடன்,  தொடர்ந்து  பிப்.13-ஆம் தேதியுடன் முதல்கட்ட அமா்வு நிறைவடைந்தது.

இந்த நிலையில்,  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (மார்ச் 9ந்தேதி)  காலை  வழக்கமான நடைமுறைகளுடன் தொடங்கியது. இதையடுத்து அவையில்,  அமெரிக்கா   இஸ்ரேல் – ஈரான் இடையே நடைபெறும் போர் குறித்து மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.

முன்னதாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்,  மேற்காசிய போர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கோரிக்கை வைத்தார்.ஆனால், அதுகுறித்து விவாதிக்க முடியாது என மாநிலங்களவை தலைவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

ஆனால், அதை கண்டுகொள்ளாமல், எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளிக்கு மத்தியில் ஜெய்சங்கர் உரையாற்றினார். அப்போது,   ”மேற்காசிய நாடுகள் மோதல் குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்து பிப். 20 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. அமைதியைக் கடைப்பிடிக்க இரு தரப்பினரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது.

பதட்டங்களைத் தணிக்க பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் நடவடிக்கை தொடர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.  மேற்காசிய சூழலை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். தொடர்ச்சியான மோதல் இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது.

வளைகுடா பிராந்தியத்தில் கிட்டத்தட்ட 1 கோடி (10 மில்லியன்) இந்திய குடிமக்களைப் பாதுகாப்பதே முதன்மையான கவனம், தெஹ்ரான் மற்றும் பிற இடங்களில் இந்திய தூதரகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகின்றன. ஈரானிலும், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இருக்கிறார்கள். வளைகுடா நாடுகள் நமது எரிசக்தி பாதுகாப்புக்கு முக்கியமான ஒன்று. நமக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகிக்கும் முக்கிய நிறுவனங்கள் இருக்கின்றன. விநியோகச் சங்கிலி சீர்குலைவு மற்றும் நிலையற்ற தன்மை ஆகியவை கடும் பிரச்னைகளாக இருக்கின்றன.

ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகம் மற்றும் வணிகக் கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகள் குறித்து அரசாங்கம் “கடுமையான கவலையை” வெளிப்படுத்தியது, மோதல் கடுமையான எரிசக்தி பாதுகாப்பு சவால்களை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் குறிப்பிட்டார்.

ஈரானின் தலைமை கொல்லப்பட்ட போதிலும், இந்தியா இஸ்ரேலுடனான அதன் மூலோபாய கூட்டாண்மையையும் ஈரானுடனான ஆழமான உறவுகளையும் சமநிலைப்படுத்தும் ஒரு “ராஜதந்திர இறுக்கமான” பாதையில் பயணிக்கிறது. இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க இந்தியா தொடர்ந்து வாதிடுகிறது, மேலும் பிராந்திய உறுதியற்ற தன்மையைத் தடுக்க பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வலியுறுத்துகிறது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து மோதலை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், சாத்தியமான வெளியேற்றத் தேவைகளுக்குத் தயாராகி வருவதாகவும், இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க பாடுபடுவதாகவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. பாதுகாப்பு நிலைமை கணிசமாக மோசமடைந்துள்ளது. மற்ற நாடுகளிலும் போர் பரவி வருகின்றது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த இரண்டு மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஒருவரைக் காணவில்லை. தெஹ்ரானில் உள்ள பல இந்திய மாணவர்கள் இந்திய தூதரகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வணிக நிமித்தமாக ஈரான் சென்ற இந்தியர்கள், ஆர்மீனியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெஹ்ரானில் உள்ள நமது தூதரகம் மிகுந்த எச்சரிக்கையுடன் முழுமையாக செயல்பட்டு வருகிறது. இந்தியர்களை பாதுகாப்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

[youtube-feed feed=1]