பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை  விதித்து மாநில முதல்வர் சித்தாராமையா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

சமீபத்தில்  டெல்லியில் நடந்த ஏ.ஐ உச்சி மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவிலும் சமூக வலைதளங்களை சிறார் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.

சமூக வலைதளங்களால் குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்தது. அண்மையில், டெல்லியில் நடந்த ஏ.ஐ உச்சி மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவிலும் சமூக வலைதளங்களை சிறார் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில்,  நாட்டிலேயே முதல் மாநிலமாக, ஐடி நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள கர்நாடக மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்து கர்நாடகா மாநிலம்‘ அதிரடி நடவடிக்கை எடுத்துளளது.இது தொடர்பான அறிவிப்பை அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா  மார்ச் 6ந்தேதி  வெள்ளிக்கிழமை, சட்டமன்றத்தில் (விதான சவுதா) 2026–27 மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று அறிவித்தார். தனது பட்ஜெட் உரையின் போது, ​​குழந்தைகளிடையே அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாட்டின் பாதகமான விளைவுகளைத் தடுப்பதே இந்த முடிவு என்று கூறினார்.

இந்திய அறிவியல் நிறுவனத்தின் (IISc) கீழ் ஏ.ஐ மற்றும் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். இந்த நிறுவனம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) மற்றும் கர்நாடக மாநில மின்னணு மேம்பாட்டுக் கழக லிமிடெட் (KEONICS) உடன் இணைந்து “பெங்களூர் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஏ.ஐ கண்டுபிடிப்பு மண்டலம்” என்ற ரோபாட்டிக்ஸ் மற்றும் ஏ.ஐ வளாகத்தை நிறுவும் என்றும் அவபிர் தெரிவித்தார்.

[youtube-feed feed=1]