மும்பை: எந்த இடத்திலும் தொழுகை நடத்துவவோம் என்பது மத உரிமை அல்ல என  பம்பாய் உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. விமான நிலையம் அருகே தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

ரம்ஜான் இஸ்லாத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தபோதிலும், புனித மாதத்தில் எந்த இடத்திலும் தொழுகை நடத்துவோம் என்பது மத உரிமை அல்ல என்று கூறியதுடன், குறிப்பாக பாதுகாப்பு கவலைகள் அதிகமாக உள்ள விமான நிலையத்திற்கு அருகில் தொழுகை நடத்துவதற்கு மத உரிமை கோர முடியாது என்று குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் டாக்ஸி ரிக்சா ஓலா-உபேர் ஆண்​கள் டிரைவர் யூனியன் சார்​பில் ஒரு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதில், “தற்​போது ரம்​ஜான் மாதம் நடை​பெற்று வரு​கிறது. இதனால், விமான ​நிலைய வளாகத்​தில் உள்ள காலி இடத்​தில் ​தொழுகை நடத்​து​வதற்கு அனு​ம​திக்க வேண்​டும்” என்று கோரப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி பி.பி. கொலபவல்லா மற்றும் நீதிபதி ஃபிர்தோஷ் பூனிவல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு,  விசாரித்து வந்தது. விமான நிலையத்திற்கு அருகில் முன்பு ஒரு தற்காலிக கொட்டகை இருந்ததாகவும், அங்கு அவர்கள் தொழுகை நடத்துவதற்கு முன்பு இருந்ததாகவும், ஆனால் அது கடந்த ஆண்டு அதிகாரிகளால் அகற்றப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்த இடத்திலும் தொழுகை நடத்துவது தானாகவே மத உரிமையாகக் கருதப்படாது என்று கூறியதுடன்,   மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் தொழுகை நடத்த அனுமதி வழங்க  மறுத்துவிட்டது.  இதுபோன்ற விஷயங்களால், பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது என்றும், செய்தது.

விமான நிலை​யப் பாது​காப்​பின் அம்​சத்தை நாங்​கள் கவனத்​தில் கொள்ள வேண்​டும். தொழுகை நடத்த விமான நிலையத்​துக்கு அரு​கில் ஒரு கட்​டிடத்தை வாங்​கு​வது என்ற கேள்விக்கே இடமில்லை. மதம் அல்​லது வேறு எந்த விஷயமோ பாது​காப்​பு​ தான் முதலில் வரு​கிறது. பாது​காப்​பைப் பொறுத்தவரை, நாங்​கள் எந்த சமரச​மும் செய்​து கொள்​ள முடி​யாது.

இவ்வாறு நீதிப​தி​கள்​ தெரிவித்​தனர்​.

[youtube-feed feed=1]