மேற்கு வங்காள மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்ததாக வந்த செய்தி தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்பது தற்போது தெரியவில்லை என்றும் கூறினார். ஆனால், வரவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் நோக்கங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.

இதற்கிடையில், மேற்கு வங்காளத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்படுகிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் தன்னிடம் தெரிவித்ததாகவும், இதுகுறித்து வழக்கமாக மேற்கொள்ள வேண்டிய ஆலோசனை எதுவும் தன்னிடம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உணர்வை பாதிப்பதுடன், கூட்டாட்சி அமைப்பின் அடித்தளத்தையே குலைக்கும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களின் மரியாதையையும் ஜனநாயக நடைமுறைகளையும் மதித்து, ஒருதலைப்பட்ச முடிவுகளை மத்திய அரசு எடுக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
[youtube-feed feed=1]