டெல்லி: டெல்லி ஏஐ மாநாட்டில், இளைஞர் காங்சிரசார் மேலாடை இன்றி போராட்டம் நடத்தியதை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
இதில் ‘என்ன அவமானம்?’ என கேள்வி எழுப்பியுள்ள ராகுல்காந்தி, எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் அதானி அமெரிக்க வழக்கை மேற்கோள் காட்டி, இதைவிடவா அவமானம் என பிரதமருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் உலக நாடுகன் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள் கலந்துகொண்ட ஏஐ மாநாடில் இளைஞர் காங்கிரசார் சிலர் புகுந்து, மேலாடையின்றி நடத்திய போராட்டம் சலசலப்பை ஏற்படுத்தியது. இது நாட்டை இழிவுபடுத்தும் செயல் என மற்றும் அநாகரிகமானது காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பல கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதுதொடர்பாக டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்து, டெல்லி இளைஞர் காங்கிரஸ் தலைவரை கைது செய்துள்ளது.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, டெல்லி ஏஐ மாநாடு, எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானது அல்ல; அது இந்தியாவுக்குரியது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் என பிரதமர் கூறினார்.
“மோடி எதிர்ப்பு என்பதே காங்கிரஸின் அரசியல். ஆனால் தேசத்தை இழிவு படுத்துவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்” என்றும், நாடாளுமன்றத்தில் செயல்பாடுகளை தடைசெய்வதோடு, கூட்டணி கட்சிகளுக்குக் கூட பேச வாய்ப்பு அளிக்காத நிலைப்பாடு காங்கிரஸால் பின்பற்றப்படு வதாக குற்றம்சாட்டிய பிரதமர், “பிரதமர் பதவியை நாடுவோர் மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும்; குடும்ப அரசியலால் அது சாத்தியமில்லை” என்றும், காங்கிரஸ் “காண்டி அவுர் நங்கி (அழுக்கு மற்றும் வெட்கமற்ற)” அரசியலில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
“மோடிஜி, நீங்கள் அவமானத்தைப் பற்றிப் பேசுகிறீர்களா? அவமானம் என்றால் என்ன என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். எப்ஸ்டீன் கோப்புகளில் உங்கள் பெயர், உங்கள் அமைச்சர் மற்றும் உங்கள் நண்பரின் பெயர்கள் ஒன்றாகக் காணப்படுகின்றன, இவ்வளவு மோசமான குற்றவாளியுடன் இணைக்கப்பட்டுள்ளன – இது அவமானகரமான விஷயம்.
நீங்கள் அமெரிக்காவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தம், அதில் நீங்கள் நாட்டையே விற்றுவிட்டீர்கள் – அது வெட்கக்கேடானது. நீங்கள் எங்கள் நாட்டின் தரவுகளை ஒப்படைத்துவிட்டீர்கள். நீங்கள் விவசாயிகளை அழித்துவிட்டீர்கள். நீங்கள் ஜவுளித் தொழிலை அழித்துவிட்டீர்கள் – அது வெட்கக்கேடானது.
அமெரிக்காவில் அதானிக்கு எதிராக நடந்து வரும் வழக்கு உங்களை இரவில் விழித்திருக்க வைத்தது என்பது முழு நாடும் அறிந்ததே – ஏனென்றால் அது பாஜக மற்றும் உங்கள் நிதிக் கட்டமைப்பிற்கு எதிரான வழக்கு. 14 மாதங்களாக, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை – அது வெட்கக்கேடானது,” என்றும் குறிப்பிட்டுள்ளது.
தொழிலதிபர் கௌதம் அதானிக்கு எதிராக அமெரிக்காவில் நடந்து வரும் நீதிமன்ற வழக்கு பிரதமரை நிலைகுலையச் செய்துள்ளதாகவும், அது பாஜக மற்றும் அதன் நிதிக் கட்டமைப்பிற்கு எதிரான வழக்கு என்றும், , “மோடிஜி, உங்கள் நண்பர்கள் அனில் அம்பானி, அதானி மற்றும் உங்களுக்கு எது பொருத்தமானதோ அதைச் செய்யுங்கள். நானும் காங்கிரஸின் சிங்க இதயம் கொண்ட வீரர்களும் நாட்டைப் பாதுகாப்போம் – நாங்கள் ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]